மனநலம் பாதித்த 8 வயது சிறுமியை கற்பழித்துக் கொன்ற குற்றவாளிக்கு தூக்கு அறிவிப்பு
ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலத்தில் மனநலம் பாதிக்கப் பட்ட 8 வயது சிறுமியைக் கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம், ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமன்ட் மாவட்டத்தில் உள்ள கன்க்ரோலி போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த மனோஜ் குமார் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டான்.
இது குறித்து மனோஜ் மீது ராஜ்சமன்ட் மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். கடந்த (2012) ஆண்டு கொண்டுவரப்பட்ட இளம்சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் குற்றவாளி மீது வழக்கு தொடரப்பட்டது.
விசாரணையில் மனோஜ் குமார் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப் பட்டதால், குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கி நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.
வழக்கு தொடரப்பட்ட ஏழே மாதங்களில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதும், இளம் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் (தடுப்பு) சட்டத்தை பயன்படுத்தி மரண தண்டனை வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications