தூக்கத்தில் இருந்து தாமதமாக எழுந்த மனைவிக்கு முத்தலாக்.. உத்தர பிரதேசத்தில் நடந்த கொடூரம்
தூக்கத்தில் இருந்து தாமதமாக எழுந்த காரணத்தால் உத்தர பிரதேசத்தில் ஒரு பெண்ணிற்கு முத்தலாக் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video

லக்னோ: தூக்கத்தில் இருந்து தாமதமாக எழுந்த காரணத்தால் உத்தர பிரதேசத்தில் ஒரு பெண்ணிற்கு முத்தலாக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கணவன் கோபத்தில் இந்த செயலை செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் 'குல் அஃப்ஷான்' என்ற அந்த பெண்ணை அவரது கணவன் அடித்து துப்புறுத்திய நிகழ்வும் நடந்து இருக்கிறது. தன் கணவன் நடந்து கொண்ட விதத்தை அந்த பெண் விளக்கும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
முத்தலாக் விவகாரத்திற்கு எதிராக பலரும் பேசி வரும் நிலையில் உத்தர பிரதேசத்தில் நடந்து இருக்கும் இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

தூக்கம்
உத்தரபிரதேசத்தில் இருக்கும் ராம்பூர் அசிம் நகரில் வசித்து வருகிறார் 'குல் அஃப்ஷான்' என்ற பெண். இவருக்கும் இவரது கணவனுக்கும் அடிக்கடி சண்டை வந்து இருக்கிறது. ஒவ்வொரு முறை சண்டை வரும் போதும் முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்யப்போவதாக அவர் மிரட்டி உள்ளார். இந்த நிலையில் நேற்று அந்த பெண் தூக்கத்தில் இருந்து தாமதமாக எழுந்த காரணத்தால் சண்டை முற்றி இருக்கிறது.

மோசமாக தாக்கினார்
இந்த சண்டை பெரிதானதை அடுத்து அந்த நபர் குல் அஃப்ஷானை மோசமாக தாக்கி உள்ளார். மேலும் வீட்டில் இருந்த இரும்புப் பொருளால் மோசமாக அவரை அடித்து உள்ளார். இதனால் அவரது முகம் மற்றும் கைகளில் நிறைய காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது.
|
முத்தலாக் கொடுத்தார்
இதையடுத்து பல நாட்களாக முத்தலாக் கொடுக்க போவதாக மிரட்டிக் கொண்டு இருந்த அந்த நபர் உண்மையாகவே முத்தலாக் கொடுத்து இருக்கிறார். மனைவியை திட்டிக் கொண்டே மூன்று முறை தலாக் சொல்லி உன்னை விவாகரத்து செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அந்த பெண் வீடியோவில் பேசியிருக்கிறார்.

முத்தலாக்கிற்கு எதிராக சட்டம்
தற்போது லோக் சபாவில் முத்தலாக்கிற்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட இருக்கிறது. முத்தலாக் ஒரு கிரிமினல் குற்றம் என்றும் இந்த சட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளது. லோக் சபாவில் சட்டம் இயற்றப்படும் அதே வேளையில் உத்தர பிரதேசத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications