வாட்ஸ் அப் மூலம் 1500 பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பிய இளைஞர் கைது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வாட்ஸ் அப் மூலம் 1500 பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்., படங்கள், மற்றும் வீடியோக்களை அனுப்பிய இளைஞரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

டெல்லி தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் முகமது காலித்(31), பேக் கடை வைத்துள்ளார். இவர் மூன்று பிரீபெய்ட் சிம் கார்டுகளை கொண்டு மனதில் தோன்றும் எண்களுக்கு போன் செய்து, பெண்கள் பேசினால் அந்த எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் ஆபாசமான மெசேஜ்களை அனுப்புவதை வாடிக்கையாக செய்துவந்துள்ளார்.

Man held for sending obscene messages to over 1500 girls

இவ்வாறு சுமார் 1500 பெண்களுக்கு வெவ்வேறு மொபைல்கள் மற்றும் நம்பர்களில் இருந்து ஆபாசமான மெசேஜ்களையும், புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக எண்ணற்ற புகார்கள் வந்ததை அடுத்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்ட போது, குற்றச்செயலில் ஈடுபட்டவரின் பெயர் காலித் என்பது தெரியவந்தது.

அவரது மொபைலில் 2100 பெண்களின் மொபைல் எண்கள் இருந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மூன்று சிம் கார்டுகளும், இரண்டு மொபைல் போன்களையும் பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+