For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீபாவளிக்கு காதியில் பொருள் வாங்குங்க... மன்கீபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேண்டுகோள்

தீபாவளி பண்டிகைக்கு காதியில் பொருட்களை வாங்க வேண்டும் என மன்கீபாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

By Suganthi
Google Oneindia Tamil News

டெல்லி: தீபாவளி பண்டிகைக்கு காதி பொருட்களை வாங்குங்கள் என மன்கீ பாத் வானொலி உரையில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடி, பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து மன்கீபாத் என்ற வானொலி நிகழ்ச்சியின் மூலம் உரையாடி வருகிறார். அந்த உரையில் இந்தியாவை முன்னேற்றும் வழிகளைக் கூறி வருகிறார்.

இன்று மன்கீ பாத் வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி அக்டோபர் மாதம் 19ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகைக்கு காதி பொருட்களை வாங்குங்கள் என வலியுறுத்தி உள்ளார். காதி ஆஷ்ரமம் பல ஆண்டுகளாக இயங்காமல் உள்ளது.

 காதி இயக்கம்

காதி இயக்கம்

காதி இயக்கத்தை முன்னேற்றிச் செல்வதால் அதை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான ஏழைகள் முன்னேறுவார்கள். காதி இயக்கத்தை முன்னேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றுகூறினார்.

 பிலால்

பிலால்

மேலும், வடக்கு காஷ்மீரில் உள்ள ஏரியை தனி மனிதனாக சுத்தப்படுத்தியதற்காக பிலால் தர் என்ற இளைஞரை பிரதமர் பாராட்டினார்.

 நவராத்திரி வாழ்த்துகள்

நவராத்திரி வாழ்த்துகள்

நவராத்திரி பண்டிகைக்கு அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்தார். சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு அனைவரும் கைகொடுக்க வேண்டும் என்றார். எந்த அரசியலும் இல்லாமல் தான் மன்கீபாத் நிகழ்ச்சியில் உரையாற்றுவதாகத் தெரிவித்தார்.

 ராணுவ அதிகாரிகளுக்கு வாழ்த்து!

ராணுவ அதிகாரிகளுக்கு வாழ்த்து!

மேலும், ராணுவத்தில் பணியாற்றி போரில் இறந்த ராணுவ வீரர்களின் மனைவி ஸ்வாதி மஹாதிக், மற்றும் நிதி துபே ஆகியோரைப் பாராட்டினார். அது மட்டுமில்லாது தூய்மை என்பதை ஒரு கருத்தியலாக நாடு முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும் என கூறினார்.

 3 ஆண்டுகளை நிறைவு செய்த மன்கீபாத்

3 ஆண்டுகளை நிறைவு செய்த மன்கீபாத்

இன்று பிரதமர் மோடி ஆற்றியது 36ஆவது மன்கீ பாத் உரையாகும். மன்கீபாத் வானொலி நிகழ்ச்சி மூன்றாண்டுகளை நிறைவு செய்துள்ளது.

English summary
Man ki baat radio prigram completed 3 years and PM Modi insisted to buy things for Deepavali from Khadi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X