பிறந்த நேரம் சரியில்லை என்று பெண் குழந்தையைக் கொன்று தந்தையும் தற்கொலை!
திருவனந்தபுரம்: கேரளாவில் பிறந்தநேரம் சரியில்லை என்று மகளைக் கொன்று தந்தையும் தற்கொலை கொண்ட சம்பவம் பெரும் பரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா அடிமாலி அருகே வெள்ளத்தூவல் பணிக்கன்குடியை சேர்ந்தவர் ஷாபு. இவருடைய மனைவி மினி. இத்தம்பதியினரின் மகள்கள் அஞ்ஜனி, ஆதிரா.
இரண்டாம் குழந்தையான ஆதிரா பிறந்த ஒன்றரை ஆண்டுக்கு பிறகு மினி இறந்து விட்டார்.
இரண்டாவது திருமணம்:
ஆகவே சுபா என்பவரை ஷாபு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். மது போதைக்கு அடிமையான ஷாபு ஆதிரா பிறந்த நேரம் சரியில்லாததால் முதல் மனைவி மினி இறந்து விட்டதாக கூறி வந்தார்.
கொலை செய்வதாக மிரட்டல்:
ஆகவே ஆதிராவை துன்புறுத்தி வந்ததுடன் கொலை செய்து விடுவதாக பலமுறை மிரட்டியுள்ளார்.
வீட்டில் தகராறு:
இந்நிலையில் பணிக்கன்குடி அரசு மேல் நிலை பள்ளியில் ஒன்பது மற்றும் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் அஞ்ஜனி, ஆதிரா ஆகியோர் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற போது ஷாபு சுபாவிடம் தகராறு செய்து கொண்டிருந்தார்.
சிக்கிக்கொண்ட ஆதிரா:
அப்போது வீட்டிற்குச் சென்ற குழந்தைகள் மீது ஷாபுவின் கோபம் திரும்பியது. மூத்த மகள் அஞ்ஜனியை கொலை செய்ய முயன்றபோது சுபா, அஞ்ஜனி ஆகியோர் ஷாபுவிடம் சிக்காமல் தப்பி ஓடினர். ஆதிரா தந்தையிடம் சிக்கிக்கொண்டார்.
போலீசுக்கு தகவல்:
சிறுமியை வீட்டிற்குள் இழுத்துச்சென்று கதவை பூட்டிக்கொண்டார். இதனைக் கண்ட சுபா மற்றும் அஞ்ஜனி ஆகியோர் கூச்சலிட்டனர். சப்தம் கேட்டு திரண்ட அப்பகுதி மக்கள் கதவை தட்டியும் திறக்கவில்லை. வீட்டினுள் எந்த சத்தமும் இல்லை. போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இறந்துபோன தந்தை, மகள்:
வெள்ளத்தூவல் போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது இருவரும் தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் ஷாபு இறந்தார். அடிமாலி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆதிரா இறந்தார்.
தூக்கிலிட்டு தற்கொலை:
மகளை தூக்கிலிட்டு கொலை செய்த ஷாபு, தானும் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications