மனைவியை கொன்று.. கட்டிலுக்கு அடியில் வைத்து விட்டு.. 3 நாட்களாக மேலே ஏறி படுத்து தூங்கிய கணவர்!
போபால்: ஆர்த்தியை கொன்றுவிட்டு, கட்டிலுக்கு கீழே சடலத்தை வைத்துவிட்டு, அந்த கட்டில் மேலேயே 2 நாளாக படுத்து தூங்கி உள்ளார் கணவர்.. இந்த சம்பவத்தை கேட்டு மத்திய பிரதேச மக்கள் ஆடிப்போய் உள்ளனர்.
போபால் அருகே உள்ளது மோத்திநகர்.. இங்கு வசித்து வந்த தம்பதி ஷெர் சிங் - ஆர்த்தி அஹிர்வார்.. ஆர்த்திக்கு 32 வயதாகிறது.. இவர்களுக்கு 10 வயது குழந்தை ஒன்று உள்ளது.

கணவர் சிங்குக்கு குடிப்பழக்கம் உள்ளது.. தண்ணி அடித்துவிட்டால் அன்றைக்கு முழுவதும் ஆர்த்தியை கண்மூடித்தனமாக அடித்து தாக்குவதுதான் வேலை. இதனால் மனம் நொந்த ஆர்த்தி, தன் அம்மா வீட்டிற்கு வந்து அடிக்கடி அழுது புலம்புவார்.
சில தினங்களுக்கு முன்பும் இப்படி சண்டை வரவும், அம்மா வீட்டுக்கு சென்ற ஆர்த்தி கடந்த வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வந்தார்.. தகராறு வெடித்தது.. இந்நிலையில், இவர்களின் அக்கம்பக்கத்து வீட்டினர் போலீசுக்கு போன் செய்து, தம்பதி வீட்டில் பெரிய தகராறு நடந்ததாகவும், மனைவியை கொலை செய்துவிடுவேன் என்று சொல்லிவிட்டு, ஒரு பெரிய கத்தியை வாங்கிட்டு சிங் வீட்டுக்கு சென்றதாகவும், வீட்டில் இருந்து துர்நாற்றம் அடிப்பதாகவும் சொன்னார்கள்.
இதையடுத்து, போலீசார் சிங் வீட்டுக்கு வந்தனர்.. வீட்டுக்குள் நுழையும்போதே நாற்றம் குப்பென்று அடித்தது.. ரத்த வாடை அது.. ஆனால் ஆர்த்தியை காணோம்.. வீடெல்லாம் தேடி தேடி பார்த்தபோதுதான், கடைசியில் படுக்கைக்கு கீழே தேடி பார்த்தனர்.. அங்கே ஒரு மரபலகை ரூமில் ஆர்த்தி பிணமாக கிடந்தார். அங்கு ஆர்த்தி சடலத்தை மறைத்து வைத்துவிட்டு, அந்த கட்டிலுக்கு மேலேயே சிங் படுத்து கொண்டிருந்தார்.
இதையடுத்து, சிங்கை கைது செய்த போலீசார், ஆர்த்தியின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பினர்.. பிறகு சிங்கிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. அப்போது, 2 நாளைக்கு முன்னாடிதான் ஆர்த்தியை கொன்னேன்.. கழுத்தை நெரித்து கொன்னுட்டேன்.. யாருக்கும் தெரியாமல் இருக்கணும்னு, பெட்-டுக்கு கீழே ஒரு கப்போர்ட் ரெடி பண்ணி, அதுக்குள்ளதான் சடலத்தை பூட்டி வெச்சேன்" என்று தெரிவித்தார்..
அவரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்களே கிலியிலும், அதிர்ச்சியிலும் உள்ளனர்.
-
கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications