குழந்தையை சுவரில் அடித்தும்.. மனைவிக்கு அயர்ன் பாக்ஸில் சூடு வைத்தும் கொலை.. சைக்கோ கணவன் கைது
கேரளாவில் ஒன்றரை வயது குழந்தையை சுவரில் அடித்து கொலை செய்துவிட்டு மனைவியின் கை, கால்களை கட்டி போட்டு அயர்ன் பாக்ஸில் சூடு வைத்துக் கொன்றவர் கைது செய்யப்பட்டார்.
கோழிக்கோடு: கேரளா மாநிலத்தில் ஒன்றரை வயது குழந்தையை சுவற்றில் அடித்து கொலை செய்துவிட்டு மனைவியை அயர்ன் பாக்ஸில் சூடு வைத்தே கொன்ற கொடூரன் கைது செய்யப்பட்டார்.
கோழிக்கோடு மாவட்டம், குன்னமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முகமதுபஷீர்(44). இவருடைய மனைவி சகிதா (37). இவர்களது ஒன்றரை வயது மகள் கதிஜாதுல்மிஸ்திரி.
முகமது பஷீருக்கு மனைவி சகிதாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.இதன் காரணமாக முகமதுபஷீர் அடிக்கடி தனது சொந்த ஊரான மடப்பள்ளிக்கு செல்வது வழக்கம்.

மீண்டும் தகராறு
இந்நிலையில் மடப்பள்ளியில் இருந்து குன்னமங்கலம் வந்த பஷீர், சகிதாவிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சகிதாவின் கை, கால்களை கட்டி போட்டார்.

அயர்ன் பாக்ஸில் சூடு
இதையடுத்து அயர்ன் பாக்ஸை ஆன் செய்து சகிதாவின் உடலில் சூடு வைத்தார். இதனால் சகிதா அலறி துடித்தார். இதை தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கேட்டு அழுதது. இதனால் பஷீரின் பார்வை குழந்தையின் பக்கம் திரும்பியது.

சுவரில் அடித்து கொலை
படுக்கை அறையில் இருந்த குழந்தையை தலையணையால் அழுத்தினார். குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. எனினும் ஆத்திரம் அடங்காமல் சுவரில் அடித்து கொலை செய்தார். பின்னர் சகிதாவின் உடலில் மேலும் அயர்ன் பாக்ஸால் சூடு வைத்தே அவரையும் கொன்றார்.

தலைமறைவு
இறந்த குழந்தையை ஒரு பெட்டியில் அடைத்து காரில் ஏற்றிக் கொண்டு கோழிக்கோட்டில் உள்ள பாலத்தில் நிறுத்தி அங்கு குழித்தோண்டி புதைத்தார்.அதன் பின்னர் மனைவியின் சடலத்தை கொண்டு வர வீடு திரும்பியபோது வீட்டின் முன்பு பொதுமக்கள், போலீஸார் சூழந்திருந்ததை பார்த்து விட்டு பஷீர் தலைமறைவானார்.

தனிப்படை அமைப்பு
அவரை பிடிக்க கோழிக்கோடு போலீஸார் தனிப்படை அமைத்தனர். இந்த நிலையில் பாலக்காடு மாவட்டம், கல்லடிக்கோடு என்ற இடத்தில் பதுங்கி இருந்த அவரை கைது செய்தனர். கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications