ரூ.25,000 கடன்... அண்ணனிடம் மனைவியை அடகு வைத்த கணவர்!
சண்டிகார்: பண விவகாரத்தில் தனது மனைவியை சகோதரரிடம் கணவரே அடகு வைத்த சம்பவம் அரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணத்திற்கு கைமாறாக அழைத்து வரப்பட்ட தம்பி மனைவியை கணவரின் சகோதரர் நண்பருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த கொடுமையும் அரங்கேறியுள்ளது.
அரியானா மாநிலம் பாய்வானி மாவட்டம் சர்க்கி டாரி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய். இவர் தனது மூத்த சகோதரரான விஜயிடம் ரூ. 25 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். ஆனால், கடனைத் திருப்பிச் செலுத்த இயலவில்லை.

அதனால், இரண்டு குழந்தைகளுக்குத் தாயான தனது மனைவியை சகோதரன் விஜயிடம் அடகு வைத்துள்ளார் சஞ்சய். பணத்தைக் கொடுத்து விட்டு மீண்டும் மனைவியை அழைத்துச் செல்வதாக அவர் கூறியுள்ளார்.
விஜய் தனது நண்பர் ஹர்கேசுடன் இணைந்து தினமும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதற்கு அப்பெண் எதிர்ப்பு தெரிவிக்கவே அவருக்கு போதை மருந்து கொடுத்து மயக்கமடைய வைத்துள்ளனர். விஜயின் மனைவி பிம்லாவும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளாக்க்ர்.
இதனால், அப்பெண்ணின் உடல்நிலை மோசமடைந்தது. மகளின் நிலை குறித்து அறிந்த அவரது பெற்றோர், விரைந்து வந்து அப்பெண்ணை மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
மருத்துவ சோதனையில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உண்மை தான் என தெரிய வந்துள்ளது. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள அப்பெண்ணிற்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் சர்க்கி டாரி போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள விஜய், அவரது மனைவி மற்றும் நண்பர் ஹர்கேஸ் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications