ஹரியானா முதல்வர் போல் நடித்து... ‘ஹோட்டல்’ வேலைக்கு முயற்சித்த இளைஞர் கைது!
குர்கான்: ஹரியானா முதல்வர் மனோகர் லால் கத்தார் போல் நடித்து, ஹோட்டலில் வேலை பெற முயற்சித்த இளைஞரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி அருகே உள்ள ரோஹினி பகுதியைச் சேர்ந்தவர் அமித் குமார் என்ற 29 வயது இளைஞர். ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பு முடித்த இவர் சமீபத்தில் க்ரவுன் பிளாசா கிச்சனில் வேலைக்காக பதிவு செய்திருந்தார். அதில் தனக்கு ஹரியானா மாநில முதல்வரின் சிபாரிசு இருப்பதாக அமித்குமார் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு க்ரவுன் பிளாசாவுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர், தான் ஹரியானா முதல்வர் மனோக்கர் லால் கத்தார் என அறிமுகம் செய்து கொண்டு, தனது சிபாரிசில் வந்துள்ள அமித் குமார் என்ற இளைஞரைப் பணியில் சேர்த்துக் கொள்ளும்படி வலியுறுத்தியுள்ளார்.
ஹரியானா முதல்வரே தங்களுக்கு போன் செய்து வேலைக்காக சிபாரிசு செய்ததால் க்ரவுன் பிளாசா ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ட்ரூகாலர் மூலம் அழைப்பு வந்த எண்ணை சோதித்த போது, அது முதல்வர் எண் இல்லை என்பது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து இது குறித்து போலீசில் அவர்கள் புகார் அளித்தனர். போலீசாரின் விசாரணையில் அமித் குமாரே தொலைபேசியில் பேசியது அம்பலமானது. அதனைத் தொடர்ந்து அவரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications