ஸ்கூட்டி வாங்கியதால் மனைவி மீது ஆசிட் ஊற்றி தானும் குடித்த கணவர்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் மனைவி ஸ்கூட்டி வாங்கியதால் ஆத்திரம் அடைந்த கணவர் அவர் மீது ஆசிடை ஊற்றிவிட்டு தானும் அதை குடித்துவிட்டார்.
உத்தர பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள மனேரா ரனியாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹவால்தார் சுக்லா(40). அவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். அவரது மனைவி தீப்மாலா(35) பள்ளி ஒன்றில் பணிபுரிகிறார்.
தீப்மாலா ஒரு ஸ்கூட்டி வாங்கியுள்ளார். இது ஹவால்தாருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் மனைவி மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காலை தீப்மாலா தன் கணவருக்கு டீ கொடுத்துள்ளார். அப்போது ஹவால்தார் அந்த அறையில் தான் வைத்திருந்த ஒரு பாட்டில் ஆசிடை எடுத்து மனைவி மீது ஊற்றினார்.
பின்னர் மற்றொரு பாட்டில் ஆசிடை எடுத்து ஹவால்தார் குடித்துவிட்டார். இதையடுத்து அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து அவர்களை அருகில் உள்ள மருத்துவமைனையில் சேர்த்தனர். அவர்களின் நிலைமை மோசமாக இருந்ததால் அவர்கள் பஹ்ரைச் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தீப்மாலாவுக்கு 60 சதவீத காயம் ஏற்பட்டுள்ளது. அவரது முகம், தலை, உடலில் பல பகுதிகள் வெந்துவிட்டது. ஹவால்தாரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications