பெற்ற மகளையே நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து பலாத்காரம் செய்த காமக்கொடூர தந்தை
Recommended Video

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பெற்ற மகளை 2 நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் தேடி வருகிறார்கள்.
உத்தர பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள கம்லாபூரை சேர்ந்த 35 வயது பெண்ணை அவரின் தந்தை திருவிழாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். திருவிழா நடந்த இடத்தை அடைந்ததும் அந்த பெண்ணின் தந்தை தனது நண்பர் மான் சிங்கிற்கு போன் செய்து வரவழைத்துள்ளார்.

மான் சிங் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. மான் சிங் வந்ததும் அந்த தந்தை தனது மகளுடன் பைக்கில் ட்ரிபிள்ஸ் சென்றுள்ளார். அந்த தந்தை தனது மகளை தனது மற்றொரு நண்பரான மீராஜின் வீட்டிற்கு பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார்.
மீராஜின் குடும்பத்தார் வீட்டில் இல்லை. இதனால் அந்த பெண்ணை மீராஜின் வீட்டில் 18 மணிநேரமாக அடைத்து வைத்து தந்தை, மான் சிங், வீட்டு உரிமையாளர் ஆகிய மூன்று பேரும் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் ஏப்ரல் 15ம் தேதி இரவு முதல் 16ம் தேதி அதிகாலை வரை நடந்துள்ளது. ஏப்ரல் 16ம் தேதி அந்த பெண் அவர்களின் பிடியில் இருந்து தப்பித்து வந்து போலீசில் புகார் அளித்தார்.
அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மீராஜை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற இரண்டு பேரையும் தேடி வருகிறார்கள். திருமணமான இரண்டு ஆண்டுகளில் அந்த பெண் தனது கணவருடன் பிரச்சனை ஏற்பட்டதால் தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்.
அந்த பெண்ணுக்கும், தந்தைக்கும் இடையே தவறான உறவு இருப்பதாக கூறிய பஞ்சாயத்தார் தந்தையை ஊரை விட்டு ஒதுக்கி கடந்த நவம்பர் மாதம் உத்தரவிட்டனர். இது குறித்து பஞ்சாயத்தார் போலீசாரிடம் தெரிவிக்க அவர்கள் தந்தையை கைது செய்தனர். பின்னர் அவர் பிப்ரவரி மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த பெண் தனது 14 வயது மகனுடன் வேறு வீட்டிற்கு சென்றுவிட்டார். ஆனால் திருவிழா நடந்த நாள் அன்று தந்தையை பார்க்க அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications