கண் தெரியாத மகளை கர்ப்பமாக்கிய காமுக தந்தை கைது
ஜபல்பூர்: கண் தெரியாத மகளை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய காமுக தந்தையை போலீசார் கைது செய்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்திலுள்ளது பார்கி என்ற கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த நபர் தனது கண் பார்வையற்ற மகளை கடந்த பலமாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மகளிடம், தனது பாலியல் அத்துமீறல்கள் குறித்து வெளியே சொன்னால் வீட்டைவிட்டு உன்னை வெளியே விரட்டிவிடுவேன் என்று மிரட்டி இதுபோல நடந்துகொண்டுள்ளார்.
கண் தெரியாத அப்பெண்ணும், வீட்டைவிட்டு விரட்டினால் எங்கு செல்வது என்பது புரியாமல் இக்கொடுமையை வெளியில் சொல்லவில்லை.
இந்நிலையில் பார்வையற்ற அப்பெண் கர்ப்பமடைந்தார். இதையடுத்து ஊர்க்காரர்களுக்கு விஷயம் தெரிந்துள்ளது. அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் ஜபல்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காமுகனை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications