ஸ்பெயின் நாட்டுப் பெண் கத்தி முனையில் பலாத்காரம்: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
மும்பை: ஸ்பெயின் நாட்டுப் பெண்ணை கத்தி முனையில் பலாத்காரம் செய்து நகைகளை கொள்ளையடித்த நபருக்கு ஆயுள்தண்டனை விதித்து மும்பை செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இசை பயின்று வருகிறார் 27 வயதான் ஸ்பெயின் நாட்டு பெண்.
அவர் கடந்த கடந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்தபோது ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த மனிதன் அவரை கத்தி முனையில் 2 முறை பலாத்காரம் செய்துவிட்டு வீட்டில் இருந்த ரூ.35,000 மதிப்புள்ள பொருட்களுடன் தப்பியோடிவிட்டான்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சுமார் 50 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இறுதியாக முகமது பாதுஷா முகமது இஸ்மாயில் அன்சாரி(30) என்பவரைப் பிடித்து விசாரித்ததில் அவர் தான் குற்றவாளி என்பது தெரிய வந்தது.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணும் அன்சாரி தான் குற்றவாளி என்று அடையாளம் காட்டியதை அடுத்து அன்சாரி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.
இந்நிலையில் இன்று அலி அன்சாரிக்கு ஆயுள்தண்டனைவிதித்து நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இவர் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications