ஏம்ப்பா, ஏன்.. தூக்கு கயிறுடன் செல்ஃபி எடுத்து தற்கொலை செய்த ஹைதராபாத் இளைஞர்!
தூக்கு கயிறுடன் செல்பி எடுத்து அதன்பின்னர் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், ராமனந்தபுர் பகுதி இளைஞர் ஒருவர் தூக்கு கயிறுடன் செல்பி எடுத்த பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் அனைத்து தரப்பு மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த கிராந்தி குமார் என்ற அந்த இளைஞர் வேன் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். அந்த இளைஞர் மேற்கூரை விசிறியில் தூக்கிட்டு வியாழன்று தற்கொலை செய்துள்ளார். அதற்கு முன்பாக தனது கழுத்தில் தூக்கு கயிறுடன் செஃல்பி எடுத்து அவரது கைப்பேசியில் வைத்துள்ளார்.

இந்நிலையில், கிராந்தி குமார் தற்கொலை செய்துகொண்டது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஹைதராபாத் போலீசார் அவரது கைப்பேசியை ஆய்வு செய்தனர். அதில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கிராந்தி குமார் தூக்கு கயிறுடன் செஃல்பி எடுத்துக் கொண்ட படம் இருந்துள்ளது. மேலும், அவர் எழுதி வைத்திருந்த கடிதமும் சட்டைப் பையில் இருந்து கைப்பற்றப்பட்டது. அதில் நிதி நெருக்கடி மற்றும் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ஹைதராபாத் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications