மோடி, கெஜ்ரிவால் வீடுகளில் குண்டு வைத்துள்ளேன்: போன் மூலம் மிரட்டல் விடுத்த நபர்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீடுகளை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக ஒருவர் தேசிய புலனாய்வு அமைப்புக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்தார்.
டெல்லியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு அலுவலகத்திற்கு சனிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு போன் அழைப்பு ஒன்று வந்தது. எடுத்து பேசியபோது மறுமுனையில் பேசியவர் பிரதமர் மோடி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரின் வீடுகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசாரும் மோடி மற்றும் கெஜ்ரிவாலின் வீடுகளுக்கு விரைந்து சென்றனர். அங்கு தீவிர சோதனை நடத்தியதில் குண்டு எதுவும் இல்லை என்பதும், அந்த நபர் பொய் சொல்லியதும் தெரிய வந்தது.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை அவரது செல்போன் எண்ணை வைத்து கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக இந்த வார துவக்கத்தில் ஒருவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து குடியரசுத் தலைவர் மாளிகையில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
போலீசார் அவரது எண்ணை வைத்து அவரை கண்டுபிடித்ததில் அவர் போதைப் பொருளுக்கு அடிமை என்பதும், போதையில் அவ்வாறு போன் செய்ததும் தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications