பெண் பிள்ளை என்பதால் பிடிக்கவில்லையாம்! 10 வயது மகளை உயிரோடு மண்ணுக்குள் புதைத்த கொடூரத் தந்தை!
அகர்தலா: வட கிழக்கு இந்தியாவில் உள்ள திரிபுரா மாநிலத்தில் வீட்டின் கொல்லைப்புறத்தில் 10 வயது மகளை உயிரோடு புதைக்க முயற்சி செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.
இந்திய-வங்கதேச எல்லைப்பகுதியில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் அபுல் ஹூசைன். இவர் மனைவி வெளியே சென்ற நேரம் பார்த்து, வீட்டின் பின் புறத்தில் ஒரு குழியைத்தோண்டி தனது 10 வயது மகளின் கை மற்றும் வாயைக்கட்டி அந்த குழிக்குள் இறக்கி மண்ணைப்போட்டு மூடியுள்ளார். சத்தம் எழுப்ப முடியாத சிறுமி பயத்தில் மயக்கமடைந்திருக்கிறாள்.

சிறுமியின் மார்பு வரை மண்ணைப்போட்டு கொண்டிருந்த போது வெளியே சென்றிருந்த மனைவி வந்து விடவே அவசர அவசரமாக ஒரு மூங்கில் டிரம்மால் சிறுமியின் தலையை மூடி விட்டு ஒன்றும் தெரியாததை போல வீட்டுக்குள் சென்று அமர்ந்துள்ளார்.
வீடு திரும்பிய மனைவி மகள் எங்கே என்று கேட்டுள்ளார். அபுல் தெரியாது என்றதும் சந்தேகமடைந்து சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அந்த சிறுமியை கண்டுபிடித்தனர். பின்னர் அபுலை அடித்து உதைத்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்று விசாரித்த போது, அந்த நபருக்கு பெண் குழந்தை பிடிக்காததால், அவளை உயிரோடு புதைத்துவிட முயன்றது தெரிய வந்துள்ளது.
காவல்துறையினரிடம், "எனக்கு என் மகளை பிடிக்கவில்லை, அதனால்தான் இப்படி செய்தேன்" என்று கூறியிருக்கிறான் இந்த கொடூர தந்தை. இச்சம்பவம் இந்திய எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications