ரத்தம் சொட்ட சொட்ட மனைவியின் தலையுடன் போலீசில் சரணடைந்த இளைஞர்!
மனைவியின் தலையை வெட்டியதுடன் கணவன் போலீசில் சரணடைந்தார்.
Recommended Video

சிக்மங்களூரு: நாடு முழுவதும் வியாபித்து உள்ள கள்ளக்காதல் இறுதியில் விபரீதத்தில்தான் போய் முடிகிறது. இப்படித்தான், கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியின் தலையை வெட்டி எறிந்துள்ளார் மங்களூரு இளைஞர் ஒருவர்.
சிக்மங்களூரு அருகே சிவானி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். வயது 35. இவருடைய மனைவி ரூபா. வயது 28. இருவரும் இவர்களுக்கு 9 வருடங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்து 2 குழந்தைகள் உள்ளனர்.

விரக்தியில் சதீஷ்
ரூபாவுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்திருக்கிறது. இது ஒருநாள் சதீஷ்-க்கு தெரியவர, ரூபாவா கூப்பிட்டு கண்டித்தார். ஆனாலும் ரூபா கேட்கவில்லை. தொடர்ந்து அந்த இளைஞருடன் தொடர்பிலேயே இருந்தால். பலமுறை கண்டித்து பார்த்த சதீஷ் கடும் விரக்தியில் இருந்து வந்துள்ளார்.

துண்டாக வெட்டினார்
இந்நிலையில், வேலை விஷயமாக காலையிலேயே பெங்களூவரை சென்ற சதீஷ், மாலை நேரத்தில் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது ரூபா வேறு ஒரு நபருடன் ஜாலியாக இருந்ததை கண்ணால் பார்த்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், ரூபாவையும், அந்த மற்றொரு நபரையும் சரமாரியாக அடித்து நொறுக்கினார். ஆனாலும் அந்த நபர் ரத்த காயத்துடன் ரூபா வீட்டிலிருந்து தப்பி ஓடினார். என்ன சொன்னாலும் அடங்காமல் தொடர்ந்து தவறு செய்து கொண்டே இருந்ததால், ரூபா மீது அதிக கோபமானார் சதீஷ். அங்கிருந்த அரிவாளை எடுத்து, ரூபாவின் தலையை துண்டாக வெட்டி எடுத்தார்.

ரத்தம் சொட்ட சொட்ட..
பின்னர் வெட்டி எடுக்கப்பட்ட ரூபாவின் தலையை ஒரு சாக்குப் பையில் போட்டு, பைக்கில் எடுத்து வைத்து கொண்டார். 20 கி.மீ. தொலைவில் உள்ள போலீஸ் ஸ்டேனுக்கு சதீஷ் பைக்கில் ரூபாவின் தலையை கொண்டு சென்றார். ரத்தம் சொட்ட சொட்ட கையில் தலையை பிடித்து கொண்டு ஸ்டேஷனுக்குள் நுழைந்தார் சதீஷ். நடந்த விவரங்களை கூறி சரணடைவதாகவும் கூறினார்.

அதிர்ச்சியில் உறைந்தனர்
இந்த காட்சியை கண்டதும் ஸ்டேஷனில் இருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றார்கள். இதையடுத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். பின்னர் விரைந்து சென்று வீட்டில் கிடந்த ரூபாவின் தலையில்லா முண்டத்தை கைப்பற்றி, சதீஷையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications