துப்பாக்கியுடன் வந்த மகாராஷ்டிரா இளைஞர் திருப்பதியில் கைது
திருப்பதிக்கு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் வந்த மகாராஷ்டிரா இளைஞர் ஒருவரை ஆந்திர போலீஸார் கைது செய்தனர்.
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: திருப்பதி அலிபிரி சோதனை சாவடியில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் துப்பாக்கி, தோட்டாக்கள் வைத்திருந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திருமலை திருப்பதிக்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். பாதுகாப்பு நலன் கருதி திருப்பதி வரும் பக்தர்களையும் அவர்களது உடைமைகளையும் போலீஸார் சோதனை செய்வது வழக்கம்.

அதன்படி இன்று அலிபிரி சோதனை சாவடியில் போலீஸார் வழக்கம் போல் பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது இளைஞர் ஒருவரிடம் துப்பாக்கியும், தோட்டாக்களும் இருந்தது தெரியவந்தது,
இதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. துப்பாக்கி கொண்டு வந்ததற்கான காரணத்தை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications