மருத்துவக் கல்லூரி மாணவியை மிரட்டி நண்பருடன் உறவுகொள்ள வைத்து வீடியோ எடுத்த 8 பேர்
மங்களூர்: மங்களூரில் மருத்துவக் கல்லூரி மாணவி மற்றும் அவரது ஆண் நண்பரை 8 பேர் கொண்ட கும்பல் மிரட்டி உறவு கொள்ள வைத்து அதை வீடியோ எடுத்துள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படிக்கும் 22 வயது மாணவி கடந்த வியாழக்கிழமை இரவு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு தனது ஆண் நண்பருடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவர்களின் கார் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது 8 பேர் கொண்ட கும்பல் வாகனத்தை வழி மறித்தது.
அந்த கும்பல் அவர்களை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்றது. அங்கு வைத்து அந்த மாணவியை அவரது நண்பருடன் உறவு கொள்ளுமாறு அந்த கும்பல் மிரட்டியுள்ளது. அவர்கள் மறுக்கவே அந்த கும்பல் அந்த 2 பேரையும் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளது.
இதையடுத்து அந்த மாணவியும், அவரது நண்பரும் உறவு கொண்டனர். அதை அந்த கும்பல் வீடியோ எடுத்தது. மேலும் ரூ.25 லட்சம் தரவில்லை என்றால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதுடன் கல்லூரி முதல்வர் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கும் தெரிவிக்கப் போவதாக அந்த கும்பல் தெரிவித்தது.
அந்த 2 பேரும் ரூ.3 லட்சம் தர சம்மதித்தனர். அதற்குள் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குற்றவாளிகளை கைது செய்ததுடன் அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். இது தவிர வீடியோவும் பறிமுதல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications