தடம்புரண்டது “மங்களூர் எக்ஸ்பிரஸ்” – பயணிகள் அனைவரும் நலம்!
Subscribe to Oneindia Tamil
மங்களூர்: கன்னூர் கார்வார் - மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் மங்களூர் அருகே இன்று தடம் புரண்டது.
தடம்புரண்ட இந்த ரயில் மங்களூர்- ஹசன் மண்டலத்துக்கு உட்பட்ட ஷிரிவாகிலு மற்றும் எடகுமாரி நிலையங்களுக்கு இடையில் இன்று காலை வேகமாக சென்று கொண்டிருந்தது.

அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த ரயிலின் எஞ்சின் மற்றும் முன் வரிசையில் இருந்த இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம்புரண்டு கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பயணிகளில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பயணிகள் அனைவரையும் அவர்கள் செல்லவேண்டிய இடங்களுக்கு சாலை வழியாக அழைத்து செல்லும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பாதை வழியாக செல்ல வேண்டிய சில முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என பாலக்காடு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications