'பாகிஸ்தானை புகழ்ந்தால் ஷூவால் அடி': சர்ச்சை சாத்வி பாலிகா சரஸ்வதி மீது கர்நாடகா போலீஸ் வழக்கு!
மங்களூர்: பாகிஸ்தானை புகழ்ந்தால் ஷூவால் அடியுங்கள் என்பது உள்ளிட்ட சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசியதாக சாத்வி பாலிகா சரஸ்வதி மீது கர்நாடகாவின் மங்களூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் சாத்வி பாலிகா. இந்து மத துறவியான இவர் கடந்த 1-ந் தேதியன்று மங்களூருவில் நடைபெற்ற இந்து மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், நீங்கள் இந்தியாவில் வாழ வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் வந்தே மாதரம் என்பதை கட்டாயமாக சொல்ல வேண்டும்.
இந்தியாவில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு கொண்டு பாகிஸ்தானை புகழ்ந்து பேசுபவர்களை ‘‘ஷூ''-வால் அடித்து பாகிஸ்தானுக்கே விரட்ட வேண்டும். அயோத்தியில் மட்டுமின்றி இஸ்லாமாபாத்திலும் ராமருக்கு கோவில் கட்டப்பட வேண்டும் என்று பேசியிருந்தார்.
அவரது இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் மங்களூருவின் பந்தேஸ்வர் காவல்நிலையத்தில் சாத்வி பாலிகா சரஸ்வதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த மங்களூர் துணை போலீஸ் கமிஷனர் சந்தோஷ் பாபு, இதேபோல் இஸ்லாமிய அமைப்பு ஒன்றும் புகார் அளித்துள்ளது. எத்தனை புகார்கள் வந்தாலும் ஒரே நடவடிக்கைதான் மேற்கொள்ளப்படும் என்றார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications