இன்னும் 75 நாட்களில் மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை சென்றடையும்... இஸ்ரோ தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இன்னும் 75 நாட்களில் மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடையும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் உறுதி தெரிவித்துள்ளனர்.

ரூ 450 கோடி செலவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் செவ்வாய் கிரகத்தைப் பற்றி ஆராய்வதற்காக உருவாக்கப்பட்டது மங்கள்யான் விண்கலம். இது கடந்த நவம்பர் மாதம் 5ம் தேதி ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

இந்த விண்கலம் தற்போது ஆழமான விண்வெளி பாதையில் பயணம் செய்து கொண்டிருக்கிறது.

சிறிய திருத்தம்...

சிறிய திருத்தம்...

இந்த விண்கலத்தில் கடந்த ஜூன் 11-ந் தேதி ஒரு சிறிய திருத்தம் செய்யப்பட்டது. அதன் மூலம் ஒதுங்கி இருந்த விண்கலம் மீண்டும் சரியான பாதைக்கு கொண்டுவரப்பட்டது.

அடுத்த திருத்தம்...

அடுத்த திருத்தம்...

வரும் ஆகஸ்ட் மாதம் இந்த விண்கலத்தில் மீண்டும் ஒரு திருத்தம் செய்யப்பட உள்ளது. தற்போது அந்த விண்கலம் எந்த பிரச்சினையும் இன்றி திட்டமிட்டப்படி பயணம் செய்து கொண்டிருக்கிறது.

75 நாட்கள்...

75 நாட்கள்...

இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்களது பேஸ்புக் பக்கத்தில் மங்கள்யான் குறித்து தகவல் வெளியிட்டுள்ளனர். அதில், முன்கூட்டியே திட்டமிட்டபடி மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தை இன்னும் 75 நாட்களில், அதாவது வரும் செப்டம்பர் 24ம் தேதி சென்றடையும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பயண தூரம்...

பயண தூரம்...

மேலும், இந்த விண்கலமானது இதுவரை 525 மில்லியன் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

செய்தி பரிமாற்றம்...

செய்தி பரிமாற்றம்...

மேலும், தற்போதைய நிலையில் பூமியில் இருந்து அனுப்பப்படும் ரேடியோ தகவல் விண்கலத்தை சென்று அடையவும், அங்கிருந்து தகவல் பூமிக்கு வந்து சேரவும் 15 நிமிடங்கள் ஆவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+