மியான்மரில் பதுங்கியிருக்கும் மணிபூர் தீவிரவாதிகளை களையெடுக்கும் இந்திய ராணுவம்
டெல்லி: மணிபூரில் கடந்த வாரம் 18 ராணுவ வீரர்களை கொலை செய்த தீவிரவாதிகளை பிடிக்க இந்திய ராணுவம் மியான்மரின் உதவியை பெற்று செயல்பட்டு வருகிறது. ராணுவ
வீரர்களை கொன்ற தீவிரவாதிகளில் பலர் மியான்மருக்கு தப்பியோடிவிட்டனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.

மியான்மர் எல்லையில் இந்திய ராணுவம் தீவிரவாதிகளை தேடி வருகிறது. இந்நிலையில் ராணுவ வீர்களை கொன்ற தீவிரவாதிகளில் சிலர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தேடுதல் பணி இன்னும் சில நாட்களுக்கு நடக்க உள்ளது. ராணுவ வீரர்களை கொன்ற சம்பவத்தில் சுமார் 70 தீவிரவாதிகளுக்கு தொடர்பு உள்ளது என்று நம்பப்படுகிறது.
மியான்மர் உதவியுடன் மணிப்பூர் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் சிலர் கொல்லப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களையும் பிடிக்க அல்லது கொல்ல இந்தியா மியான்மரின் உதவியை நாடியுள்ளது.
மியான்மர் எல்லையில் உள்ள காட்டுப்பகுதியில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 100 பேர் தீவிரவாதிகளை அழிக்கும் ஆபரேஷனில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மியான்மரில் தஞ்சம் அடைந்துள்ள தீவிரவாதிகளுக்கு வலுவான செய்தியை அனுப்ப இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.
முன்னதாக மியான்மரில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை அழிக்குமாறு அந்நாட்டுக்கு இந்தியா பலமுறை கோரிக்கை விடுத்தும் ஒன்றும் நடக்கவில்லை. இந்நிலையில் தான் இம்முறை மியான்மரின் உதவியுடன் இந்திய ராணுவம் தீவிரவாதிகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications