அதெல்லாம் முடியாது.. டெல்லி சொன்னாதான் ராஜினாமா.. மணிப்பூர் பாஜக முதல்வர் பைரேன்சிங் பிடிவாதம்!
இம்பால்: மணிப்பூரில் இனவன்முறைகள் தொடரும் நிலையில் தாம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவே முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார் அம்மாநில ஆளும் பாஜக அரசின் முதல்வர் பைரேன் சிங் (பிரேன் சிங்).
மணிப்பூரில் குக்கி, மைத்தேயி இனக்குழுக்களிடையே 3 மாதங்களாக மிகப் பெரும் வன்முறை நிகழ்ந்து வருகிறது. இதில் குக்கி இன மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 3 மாதங்களாக இணையசேவை துண்டிக்கப்பட்டதால் மணிப்பூரின் உண்மை நிலவரம் வெளி உலகத்துக்கு தெரிவிக்கப்படவில்லை என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

மணிப்பூர் வன்முறைகளில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இடம்பெயர்ந்தனர். மணிப்பூரில் குக்கி பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோக்கள் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளன. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் தர வலியுறுத்தி நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கி உள்ளன.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது முதலே, பிரதமர் மோடி விளக்கம் தர எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. நாடாளுமன்றத்தின் இரு சபைகளையும் ஒத்திவைத்துவிட்டு சபைகளில் விவாதம் நடத்த வேண்டும் என ஒவ்வொரு நாளும் 50க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்து வருகின்றனர். ஆனாலும் மத்திய அரசு இதனை பொருட்படுத்தவில்லை. இதனையடுத்து இன்று மத்திய பாஜக அரசு மீது லோக்சபாவில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர அனைத்து எதிர்க்கட்சிகளும் முடிவு செய்துள்ளன.
இந்நிலையில் மணிப்பூர் முதல்வர் பதவியை தாம் ராஜினாமா செய்ய முடியாது என பைரேன் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பைரேன்சிங் கூறியதாவது: பாஜக என்பது உலகத்தில் பெரிய கட்சிகளில் ஒன்று. பாஜகவின் டெல்லி தலைமை சொல்வதைத்தான் நான் கேட்க முடியும். டெல்லி தலைமை உத்தரவிட்டால் நான் மணிப்பூர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக 6,000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஒன்றே ஒன்றுதான் பலாத்கார வழக்கு. இம்மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த ராணுவத்துடன் மாநில அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது. இவ்வாறு பைரேன் சிங் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications