மணிப்பூர்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ18.80 கோடி கொள்ளை-10 பேர் கும்பலுக்கு வலை!
இம்பால்: மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ18.80 கோடி ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 10 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
உக்ருல் மாவட்டத்தில் உள்ள பஞ்சாப் நேஷன்ல் வங்கி கிளையை ரிசர்வ் வங்கி பயன்படுத்தி வந்தது. இந்த கிளையில் இருந்துதான் வங்கிகள், ஏடிஎம்களுக்கு பணம் கொண்டு செல்லப்பட்டும் வந்தது. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து 80 கி.மீ தொலைவில் இந்த வங்கி கிளை உள்ளது.

உக்ருல் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைக்கு நேற்று மாலை 10 பேர் கொண்ட கும்பல் வாகனங்களில் வந்திறங்கியது. ஆயுதங்களால் வங்கி காவலர்களை மிரட்டி உள்ளே நுழைந்த அந்த கும்பல், வங்கி ஊழியர்கள், பாதுகாப்பு ஊழியர்களை கழிவறையில் பூட்டி வைத்தது. வங்கியின் மூத்த பணியாளர் ஒருவரை துப்பாக்கி முனையில் அழைத்து வந்து பெட்டகங்களை திறக்கச் செய்தது அந்த கும்பல்.
வங்கி லாக்கர் உள்ளிட்டவைகளில் இருந்த மொத்தம் ரூ18.80 கோடி பணத்தை கொள்ளை கும்பல் கொள்ளையடித்துச் சென்றுவிட்டது. இந்த சம்பவம் தொடர்பாக உக்ருல் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிசிடிடி கேமராக்கள் உதவியுடன் கொள்ளையர்கள் யார் என விசாரண நடத்தினர். இச்சம்பவம் மணிப்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications