மணிப்பூர் சட்டசபை தேர்தலில் பகீர்- வேட்பாளரின் தந்தை மீது துப்பாக்கிச் சூடு- பாஜக மீது புகார்
இம்பால்: மணிப்பூர் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் என்.பி.பி. கட்சி வேட்பாளரின் தந்தை துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேட்பாளரின் தந்தை மீது பாஜகவினரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக என்.பி.பி. கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
60 இடங்களைக் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு வரும் 27-ந் தேதி, மார்ச் 5-ந் தேதி ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் முதலில் அறிவித்தது. ஆனால் வாக்குப் பதிவு நடைபெறும் 27-ந் தேதி தேவாலயங்களில் நிகழ்வுகள் இருப்பதால் தேர்தல் தேதியை மாற்றி வைக்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மணிப்பூர் தேர்தல்
இதனையடுத்து மணிப்பூரில் வரும் 28 மற்றும் மார்ச் 5 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. மணிப்பூரில் காங்கிரஸ் செல்வாக்காக இருந்தது. ஆனால் கூண்டோடு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவியதால் அம்மாநிலத்தில் காங்கிரஸின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. இம்மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் அனல் பறந்து கொண்டிருக்கிறது.

சரமாரி துப்பாக்கி சூடு
இந்நிலையில் என்.பி.பி. எனப்படும் தேசிய மக்கள் கட்சியின் ஆண்ட்ரோ சட்டசபை தொகுதி வேட்பாளர் சஞ்சோய் சிங் தமது வீட்டில் தந்தை மற்றும் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் வேட்பாளர் சஞ்சோய் சிங்கின் தந்தை படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆண்ட்ரோ தொகுதியில் பல இடங்களில் வன்முறைகள் வெடித்தன. இதில் 7 பேர் படுகாயமடைந்தனர்.

பாஜக மீது புகார்
தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் சஞ்சோய் சிங் அண்மையில்தான் பாஜகவில் இருந்து விலகினார். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தேசிய மக்கள் கட்சி புகார் தெரிவித்துள்ளது. ஆனால் இதனை முதல்வர் பைரோன்சிங் நிராகரித்துள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் முதல்வர் பைரோன்சிங் உறுதியளித்துள்ளார். இச்சம்பவத்துக்கு மேகாலயா முதல்வரும் தேசிய மக்கள் கட்சித் தலைவருமான கான்ராட் சங்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

10 தொகுதிகளில் வன்முறைகள்
மணிப்பூரில் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மணிப்பூர் முதல்வர் பைரோன்சிங் எச்சரித்துள்ளார்.
-
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு












Click it and Unblock the Notifications