நாளை மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தல் .. பெண் வாக்காளர்களின் எதிர்பார்ப்பு என்ன?
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் நாளை முதற்கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் சிறிய தொழில்களுக்கு ஆதரவு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
60 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நாளை 28 ஆம் தேதியும் மார்ச் 5 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது.
மணிப்பூரின் 38 தொகுதிகளில் நாளை முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக 173 வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள். முதல் கட்ட தேர்தலில் காங்கிரஸ் கட்சி 35 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இதில் 4 பேர் பெண்கள். பாஜகவில் 36 பேர் ஆண்கள், 2 பேர் பெண் வேட்பாளர்கள். நாகா மக்கள் கட்சி 24 ஆண்களையும் 3 பெண்களையும் வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளது.

மணிப்பூரில் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் அங்குள்ள பெண் வாக்காளர்கள் எதிர்பார்ப்பது சிறிய தொழில் தொடங்குவதற்கு அரசு ஆதரவைத்தான். அந்த எதிர்பார்ப்பை எந்த கட்சி நிறைவேற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.
பாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தில் பெண்களுக்கு இரு இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும். மணிப்பூரில் கல்லூரியில் சிறப்பாக படிக்கும் மாணவர்களுக்கு இலவச ஸ்கூட்டர்கள் வழங்கப்படும். மணிப்பூரில் மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற உதவும் வகையில் திறன் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது போல் காங்கிரஸ் கட்சி வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும். இளைஞர்களுக்கு 50 ஆயிரம் புதிய வேலைகள் உள்ளிட்ட வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications