தேர்தலுக்கு காத்திருக்கும் மணிப்பூர் தமிழர்கள் - நல்லவர்களுக்கு ஓட்டளிக்க விருப்பம்
மோரே: மணிப்பூர் மாநிலத்தில் வசித்து வரும் பல நூறு தமிழர்கள் வரும் லோக்சபா தேர்தலை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
தமிழ்நாட்டிலிருந்து 3,500 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மணிப்பூர் மாநிலத்தில் நிறைய தமிழர்கள் வசித்து வருகிறார்கள்.
இவர்கள் அனைவரும் பல காலமாக இங்கு வசித்து வருபவர்கள். இந்தத் தேர்தலில் நல்லவர்களுக்கும், பொறுப்பானவர்களுக்கும் தாங்கள் வாக்களிக்க ஆர்வமாக இருப்பதாக கூறுகிறார்கள்.

அகதிகளாய் வந்த தமிழர்கள்:
1960 இல் மியான்மரில் இருந்து அகதிகளாக வந்த தமிழர்கள் தமிழக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

மணிப்பூரில் வாழ்க்கை:
சில ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் மீண்டும் பர்மா செல்ல முயன்ற போது, இந்திய எல்லையில் அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் வேறு வழியின்றி பர்மா தமிழர்கள் மணிப்பூரிலிருந்து வாழத் தொடங்கி விட்டனர்.

3500 தமிழர்கள்:
மணிப்பூரில் உள்ள மோரே மாவட்டத்தில் இன்று 3,500 தமிழர்கள் வசிக்கிறார்கள். அங்கும் தமிழ் பண்டிகைகள் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மணிப்பூர் மக்களுடன் இணைந்து அம்மாநில பண்டிகைகளும் கொண்டாடுகின்றனர்.

தமிழர்கள் ஓட்டு நல்லவர்களுக்கே:
இந்நிலையில் மக்களவை தேர்தலை மணிப்பூர் தமிழர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இதுபற்றி மோரே சேம்பர் ஆப் காமர்ஸ் செயலாளர் சுப்பிரமணியம் கூறுகையில், "மோரே மாவட்டத்தில் குடிநீர், மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை. இதை நிறைவேற்றித் தரும் வேட்பாளர்களுக்கே தமிழர்களின் ஓட்டு" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications