தமிழர்கள் வாழும் மணிப்பூர் மோரே நகரில் ’குக்கிகள்’ பயங்கர தாக்குதல்- போலீஸ் அதிகாரி சுட்டு கொலை!
மோரே: மணிப்பூரில் தமிழர்கள் வாழும் மோரே நகரில் போலீசார் மீது குக்கி இன பழங்குடிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு போலீஸ் உயர் அதிகாரி உயிரிழந்தார். மேலும் 3 போலீசார் படுகாயமடைந்தனர். இதனால் மோரே நகரில் பெரும் பதற்றம் நீடிக்கிறது.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி மக்கள் 53% வசிக்கின்றனர். குக்கி, நாகா இன மக்கள் 40% இருக்கின்றனர். மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இன மக்களை பழங்குடி மக்கள் பட்டியலில் சேர்க்க அம்மாநில உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தது. இதனையடுத்து மணிப்பூரில் ஆளும் பாஜக அரசு, மைத்தேயி மக்களை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு பழங்குடிகள் பட்டியலில் உள்ள குக்கி, நாகா மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் 6 மாதங்களுக்கு முன்னர் வன்முறை வெடித்தது.

மணிப்பூர் மாநிலத்தில் 6 மாதங்களாக நீடிக்கும் வன்முறையால் ஒட்டுமொத்தமாக மாநிலமே மைத்தேயி/ குக்கி இன மக்கள் என இரண்டாக பிளவுபட்டுள்ளது. இந்த வன்முறைகளில் 300 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாகி உள்ளனர். இந்த வன்முறை இன்னமும் ஓயவில்லை.
மோரே: மணிப்பூரில் மியான்மர் நாட்டின் எல்லையில் உள்ளது மோரே நகரம். இங்கு ஆயிரக்கணக்கான தமிழர்கள் வசிக்கின்றனர். இங்கு குக்கி-ஜோ பழங்குடிகள் பெரும்பான்மையினராக உள்ளனர். மோரேவில் ஹெலிபேட் அமைக்கும் பணியை போலீஸ் அதிகாரிகள் குழு பார்வையிட சென்றது.

Deeply saddened by the cold-blooded killing of SDPO Chingtham Anand, OC Moreh Police this morning. His dedication to serve and protect the people will always be remembered. The perpetrators will be brought to justice.
— N.Biren Singh (@NBirenSingh) October 31, 2023
துப்பாக்கி சூடு- போலீஸ் அதிகாரி பலி: அப்போது ஆயுதம் ஏந்திய குக்கி பழங்குடிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸ் உயர் அதிகாரி ஆனந்த் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து மோரே சுற்றிய பகுதிகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த நடவடிக்கைக்கு எதிராகவும் குக்கி பழங்குடிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 3 போலீசார் படுகாயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து மோரே நகரில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

முதல்வர் கண்டனம்: இந்த தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து முதல்வர் பிரேன்சிங் அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். மோரே வன்முறைகளுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. குக்கி பழங்குடிகள் தாக்குதலில் பலியான போலீஸ் அதிகாரியின் குடும்பத்துக்கு ரூ50 லட்சம் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் எனவும் மணிப்பூர் அரசு அறிவித்துள்ளது.



-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications