மஞ்சு வாரியார் இரண்டாவது திருமணம் - போலி புகைப்படம் குறித்து சைபர் கிரைமில் புகார்!
திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் எவர்கீரின் நடிகையாக விளங்கும் மஞ்சு வாரியார் பற்றிய தவறான புகைப்படம் ஒன்று வாட்ஸப்பில் பரவி வருவதை அடுத்து அவர் கேரள சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார்.
உண்மை என்னவென்றே தெரியாமல் கேரள ரசிகர்களும் இந்த புகைப்படத்தினை வேகமாக ஷேர் செய்து வருகின்றனராம். இதனையடுத்து இப்புகைப்படம் குறித்து புகார் செய்துள்ளார் மஞ்சு வாரியார்.
மஞ்சு வாரியாருக்கும், ஒரு விளம்பர இயக்குனருக்கும் விரைவில் இரண்டாவது திருமணம் நடக்க உள்ளதாக கூறி, இந்த புகைப்படம் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது.

பரப்பும் விஷமிகள்:
அப்புகைப்படத்தில் மஞ்சு வாரியாருடன் இருப்பது இண்டீரியர் டிசைனரான ரியாஸ் கோமு. கொச்சி பினாலே விழாவின் போது எடுக்கப்பட்ட இப்புகைப்படத்தினைதான் தவறாக பயன்படுத்தி வருகின்றனர் விஷமிகள்.

பெண்களுக்கு எதிரானது:
இதனையடுத்து தன்னுடைய வாழ்க்கையும், அந்த இயக்குனர் மற்றும் ரியாஸின் வாழ்க்கையும் இந்த தவறான புகைப்படத்தால் பாதிக்கப்படும் எனவும், இது ஒட்டு மொத்த பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஒன்று எனவும் மஞ்சு புகார் அளித்துள்ளார்.

தனியாக வாழ்க்கை:
ஏற்கனவே நடிகர் திலீப்புடன் விவாகரத்து பெற்ற மஞ்சு தனியாக வாழ்ந்து வருகின்றார். மீண்டும் படங்களிலும் நடித்து வருகின்றார். மலையாள திரைப்பட உலகில் சிறந்த நடிகையாக விளங்குகின்றார் மஞ்சு வாரியார்.

தவறான தகவல்கள்:
இந்நிலையில் அவரைப் பற்றியும், திலீப், காவ்யா மாதவன் பற்றியும் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர் சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications