மன்மோகனை பிரதமராக்கியது தப்பாப் போச்சு.. சொல்கிறார் மணிசங்கர அய்யர்
டெல்லி: பிரதமர் பதவியில் மன்மோகன் சிங்கை அமர்த்தியது தவறு என்று பகிரங்கமாக மன்மோகன் சிங்கை சாடியுள்ளார் மணிசங்கர அய்யர்.
டெல்லி உள்ளிட்ட நான்கு மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வியடைந்துள்ளது. இதனால் காங்கிரஸ் வட்டாரம் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்துள்ளது.
பாஜகவினர் இந்த தோல்வியை மோடி அலைதான் காரணம் என்று கூறுகிறார்கள். ஆம் ஆதமி போன்றோரோ மக்கள் மாற்று அரசியலுக்கு ஆதரவளிக்கத் தொடங்கி விட்டதாக கூற ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் பல்வேறு விதமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு மணிசங்கர அய்யர் அளித்த பேட்டியில், மன்மோகன் சிங்கை பிரதமராக்கியதுதான் காங்கிரஸ் செய்த தவறு என்று கூறியுள்ளார். அந்தத் தவறுதான் காங்கிரஸின் இன்றைய நிலைக்குக் காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே எனக்கு சந்தேகம்
மன்மோகன் சிங்கின் ஞானம் குறித்து நான் ஏற்கனவே பலமுறை கேள்வி எழுப்பியுள்லேன். ஆனால் யாருமே நான் கூறியதை காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.

பெரும் தவறு
மன்மோகன் சிங்கை பிரதமராக்க எடுத்த முடிவுதான் மிகப் பெரிய தவறு. அந்தத் தவறை காங்கிரஸ் செய்திருக்கக் கூடாது. இப்போது அனுபவிக்கிறோம்.

ஒட்டுமொத்தமாக மாற்றுங்கள்
காங்கிரஸ் கட்சியின் அமைப்பையே ஒட்டுமொத்தமாக மாற்ற வேண்டும். எதிர்க்கட்சி வரிசையில் அமர காங்கிரஸ் தயாராக வேண்டும். அதுதான் நம்மை நாமளே புரிந்து கொள்ள உதவும்.

அரசு வேறு, காங்கிரஸ் வேறு...
அரசாங்கம் என்பது வேறு, காங்கிரஸ் கட்சி வேறு. இரண்டையும் சேர்த்துப் பார்க்கக் கூடாது. அதேசமயம், இந்த இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக கூற முடியாது.

பிரதமருக்கும், சோனியாவுக்கும் நல்ல புரிந்துணர்வு
கட்சித் தலைவர் சோனியா காந்திக்கும், பிரதமருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு இருக்கிறது. இருவரும் குறித்த கால இடைவெளியில் சந்திக்கவும் செய்கின்றனர். ஆலோசனைகளையும் நடத்துகின்றனர்.

இப்போது பிரதமரை மாற்றத் தேவையில்லை
மாற்றம் என்று நான் சொல்வதால் பிரதமர் மன்மோகன் சிங்கை மாற்றி விட்டு, ப.சிதம்பரத்தைக் கொண்டு வர வேண்டும் என்று அர்த்தம் இல்லை. அது தவறான கேள்வி. பிரதமரை மாற்ற வேண்டிய அவசியம் இப்போது இல்லை. கட்சியை புதுப்பிக்க வேண்டும். ராஜீவ் காந்தி கூட அதைத்தான் அன்றே சொன்னார். கட்சியை முழுமையாக மாற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.

உஷாராகாவிட்டால் கஷ்டமாகி விடும்
ராஜீவ் சொன்ன யோசனைகள், அவரால் நியமிக்கப்பட்ட உமாசங்கர் தீட்சித் கமிட்டி கூறிய அறிவுரைகள், பரிந்துரைகள், ஏ.கே.அந்தோணி குழு பரிந்துரைத்தவை ஆகியவற்றை காங்கிரஸ் தலைமை சீரியஸாக சிந்திக்க வேண்டிய நிலை வந்து விட்டது. அதை நாம் கவனித்து சரிப்படுத்தாவிட்டால், வரும் தேர்தலில் கஷ்டமான நிலை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

சோனியா வேறு என்ன செய்ய முடியும்...
சட்டசபைத் தேர்தல் தோல்விக்கு தானே பொறுப்பேற்பதாக சோனியா காந்தி ஏற்கனவே கூறி விட்டார். இதற்கு மேல் அவர் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்றார் அய்யர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications