மார்ச் 4ம் தேதி மியான்மரில் மன்மோகன்சிங் - ராஜபக்சே சந்திப்பு
டெல்லி: அடுத்தமாதம் மியான்மரில் நடைபெற உள்ள மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும், இலங்கை அதிபர் ராஜபக்சேவும் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் மார்ச் மாதம் 4ம் தேதி மியான்மர் நாட்டில் நடைபெற இருக்கும் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்கிறார். அப்போது அவர் அந்த மாநாட்டிற்கு வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருக்கிறார். இத்தகவலை டெல்லியில் வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதாசிங் நேற்று உறுதி படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடன் பேசிய சுஜாதாசிங், இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து சர்வசேத விசாரணைக்கு இலங்கை உட்படவேண்டும் என பல நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில் இலங்கை மீதான கண்டன தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு கொடுக்குமா? என்ற கேள்விக்கு மட்டும் நேரிடையாக பதில் அளிக்க மறுத்து விட்டார். ‘தீர்மானத்தை முழுமையாக படித்து ஆய்வுசெய்த பிறகே அதுபற்றி முடிவெடுக்க முடியும்' என அவர் தெரிவித்தார்.
கடந்தாண்டு இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பதற்கு தமிழக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதனைத் தொடர்ந்து அம்மாநாட்டில் இந்தியா சார்பாக சல்மான் குர்ஷித் கலந்து கொண்டார். இந்நிலையில் ராஜபக்சேவுடனான பிரதமரின் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications