ஆந்திராவில் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ சுட்டுக்கொலை.. மாவோயிஸ்டுகள் வெறிச்செயல்!
ஆந்திராவை சேர்ந்த எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வர் ராவ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சிவசேரி சோமா ஆகியோர் மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத்: ஆந்திராவை சேர்ந்த எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வர் ராவ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சிவசேரி சோமா ஆகியோர் மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வர் ராவ் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர். அதே கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ எம்எல்ஏ சிவசேரி சோமாவும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று காலை இவர்கள் காரில் ஒன்றாக சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

உடன் சென்ற பாதுகாவலரும் சுட்டுக் கொல்லப்பட்டார். பாதுகாவலருடன் சேர்த்து மூன்று பேர் பலியாகி உள்ளனர். மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கி சூடு காரணமாக இந்த சம்பவம் நடந்து இருப்பதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
TDP leaders Kidari Sarveswara Rao (pic 1) & Siveri Soma (pic 2), present and former MLA from Araku respectively, who were shot dead by Naxals in Visakhapatnam today. #AndhraPradesh pic.twitter.com/PmlfDzlPFl
— ANI (@ANI) September 23, 2018
எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வர் ராவ் ஏற்கனவே மாவோயிஸ்டுகளின் கண்காணிப்பில் இருக்கிறார் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொல்லப்பட்ட கிடாரி, அரக்கு தொகுதி எம்எல்ஏ ஆவார். அரக்கு தொகுதியின் தும்பரிகூட மண்டல் என்ற பகுதியில் இந்த கொலை நடந்து இருக்கிறது.
போலீஸ் தற்போது அங்கு விரைந்து உள்ளது. சுட்டவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications