மத்திய அரசுக்கு எதிராக மாவோயிஸ்டுகள் சதி? ஆந்திரா, தெலுங்கானாவில் 60 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை
திருப்பதி: ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மாவோயிஸ்டுகளை ஆதரிக்கும் எழுத்தாளர்கள், வழக்கறிஞர்களின் வீடுகள் உள்ளிட்ட 60 இடங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கு எதிராக மாவோயிஸ்டுகள் சதி செய்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் மாவோயிஸ்டுகள் கை ஓங்கி இருந்து. ஆந்திரா, ஒடிஷா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் என பல மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் இருந்தது.

மாவோயிஸ்டுகளின் பலம்: மாவோயிஸ்டுகளின் பலமாக இருந்து பழங்குடி மக்கள் வாழும் மலைகள். மாநிலங்களுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் மலைகள் கூடுதல் பாதுகாப்பாக மாவோயிஸ்டுகளுக்கு இருந்து வந்தது. ஒரு கட்டத்தில் மாவோயிஸ்டுகள் வசம் உள்ள பழங்குடி பகுதிகளுக்கான அடிப்படை தேவைகளை பெரும் போராட்டத்துக்குப் பின் மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றின. இதற்கு மாவோயிஸ்டுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சில இடங்களில் தாக்குதல்கள் நடத்தி இருந்தனர்.

இல்லாமல் போகும் மாவோயிஸ்டுகள்: தற்போதைய நிலையில் பொது நீரோட்டத்தில் இணைந்தவர்களாக பழங்குடி மக்கள் வாழ்வியல் மாறிவிட்டது. இதனால் இயல்பாகவே மாவோயிஸ்டுகளுடனான பழங்குடி மக்களின் தொடர்பு சங்கிலி அறுந்து கொண்டிருக்கிறது. இதுதான் மாவோயிஸ்டுகளுக்கு பெரும் நெருக்கடியாக அமைந்துவிட்டது. அத்துடன் கடந்த காலங்களைப் போல மாவோயிஸ்டுகள் இயக்கத்தை நம்பி புதிய இளைஞர்கள் செல்வதும் இல்லை. இதனால் மாவோயிஸ்டுகள் இயல்பாகவே தங்களது இருப்பைத் தொலைத்து கொண்டிருக்கின்றனர்.
மாவோயிஸ்டுகளை உயிர்ப்பிக்க முயற்சி: அதேநேரத்தில் இதனை ஜீரணிக்க முடியாத சில சக்திகள், மாவோயிஸ்டுகளை உசுப்பிவிடக் கூடிய சதிவேலைகளையும் செய்து வருகின்றனர். ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 'முற்போக்கு சக்திகள்' என்ற பெயரில் மாவோயிஸ்டுகளுக்கு ஆயுதங்கள், டிரோன்கள் உள்ளிட்டவைகளை கடத்திச் செல்கிற போக்கும் இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

60 இடங்களில் என்.ஐ.ஏ. ரெய்டு: இதனடிப்படையில் கடந்த சில மாதங்களாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி சில மாவோயிஸ்டுகளையும் ஸ்லீப்பர் செல்களையும் கைது செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று ஆந்திரா, தெலுங்கானாவில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆந்திரா, தெலுங்கானாவில் வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள் வீடுகளில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.












Click it and Unblock the Notifications