பீகாரில் ஓடும் ரயிலில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்- 3 போலீசார் சுட்டுக்கொலை!

பீகார், ஒடிஷா, மேற்குவங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினர் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந் நிலையில் பீகார் மாநிலம் முங்கர் மாவட்டம் ஜமல்பூர்-ஆஷிக்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே செகப்கஞ்ச்-பாட்னா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை சென்று கொண்டிருந்தது.
அந்த ரெயில் ஜமல்பூர் கலிபகரி குகைப்பகுதியில் சென்றபோது ரயிலில் பயணம் செய்த சில மாவோயிஸ்டுகள் திடீரென்று பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதைசற்றும் எதிர்பாராத பாதுகாப்பு படையினர் துப்பாக்கிகளை எடுப்பதற்கு முன்னதாக மாவோயிஸ்டுகள் அவர்களை சுட்டுக்கொன்றனர். இதில் 3 போலீசார் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 2 போலீசாருக்கு குண்டுகாயம் ஏற்பட்டது.
பின்னர் மாவோயிஸ்டுகள் போலீசாரின் 5 தானியங்கி துப்பாக்கிகளை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.












Click it and Unblock the Notifications