சிறைக் கைதிகளை விடுவிக்காததற்கு "மிகப் பெரிய விலை" கொடுப்பீங்க: ஒடிஷாவுக்கு மாவோயிஸ்டுகள் வார்னிங்!
மல்காங்கிரி: ஒடிஷா மாநில அரசு உறுதியளித்தபடி சிறைக் கைதிகளை விடுவிக்காததற்கு எதிர்காலத்தில் மிகப் பெரிய விலை கொடுக்க நேரிடும் என்று மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக ஆயிரக்கணக்கான அப்பாவி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஒடிஷாவின் ரலேகடா மலைப் பகுதியில் மாவோயிஸ்டுகள் பொதுக்கூட்டம் நடத்தினர்.
இந்த பொதுக்கூட்டத்தில் பெரும் திரளான பழங்குடி இனமக்கள் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் பேசிய மூத்த மாவோயிஸ்டு தலைவர்கள், மல்காங்கிரி மாவட்ட ஆட்சியராக இருந்த வினீல் குமாரை கடத்திய போது, அவரை விடுவிப்பதற்காக சிறைக் கைதிகளை விடுதலை செய்வதாக ஒடிஷா அரசு உறுதி அளித்தது.
ஆனால் அந்த வாக்குறுதியை இன்னமும் ஒடிஷா அரசு நிறைவேற்றவில்லை. இதற்காக எதிர்காலத்தில் மிகப் பெரிய விலையை ஒடிஷா மாநில அரசு கொடுக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளனர்.
இதனால் மாவோயிஸ்டுகள் மிகப் பெரிய தாக்குதல் நடத்தவோ அல்லது முக்கிய பிரமுகர்கள் யாரையேனும் கடத்தவோ வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications