கேரளாவில் மாவோயிஸ்டுகளுடன் போலீசார் பயங்கர துப்பாக்கி சண்டை!
பாலக்காடு: கேரளாவில் மாவோயிஸ்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் அட்டப்பாடி பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து மாவோயிஸ்டுகளை வேட்டையாட தண்டர்போல்ட் எனும் அதிரடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து தகவல் கிடைத்ததும் புதூரில் இருந்து கவுடியார்கண்டி நோக்கி போலீசார் சென்று கொண்டிருந்தனர். அப்போது வெள்ளகண்டி என்ற இடத்தில் போலீசார் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து போலீசாரும் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினர். இருதரப்புக்கும் இடையே சுமார் அரை மணிநேரம் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இதில் போலீசார் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அதே நேரத்தில் மாவோயிஸ்டுகள் சிலருக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவர்கள் சிகிச்சைக்காக பக்கத்தில் உள்ள நகரங்களுக்கு வர வாய்ப்பிருப்பதாகவும் அப்பகுதியில் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து தண்டர்போல்ட் அதிரடிப்படையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து தமிழகம், கர்நாடகா எல்லைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications