வறட்சிக் கொடுமை... தற்கொலைக்கு அனுமதி கோரி 40 கல்லூரி மாணவர்கள் கலெக்டருக்குக் கடிதம்
அவுரங்காபாத்: மராட்டிய மாநிலத்தில் வறட்சிக் கொடுமையால் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த 40 மாணவர்கள் தாங்கள் தற்கொலை செய்து கொள்ள அனுமதி தர வேண்டும் என மரத்வாடா மாவட்ட ஆட்சியாளருக்கு கடிதம் எழுதியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர் விவசாயிகள். அதிலும் குறிப்பாக லாத்தூர் மாவட்டம், மரத்வாடா மண்டலத்தில் வறட்சி காரணமாக விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அப்பகுதி விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த 40 மாணவர்கள் லாத்தூர் மகாத்மா பஸ்வேஷ்வர் கல்லூரியில் பயின்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அம்மாவட்ட ஆட்சியாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
அதில், ‘‘வறட்சி காரணமாக எங்களது பெற்றோர் ஏற்கனவே பண பிரச்சினையில் சிக்கி தவிக்கிறார்கள். ஆகையால், எங்களது கல்வி செலவை அவர்களால் ஏற்க முடியவில்லை. எனவே, நாங்கள் தற்கொலை செய்துகொள்ள அனுமதி தாருங்கள்'' என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரே கல்லூரியைச் சேர்ந்த 40 மாணவர்கள், தற்கொலை செய்துகொள்ள அனுமதி வேண்டி எழுதியுள்ள இக்கடிதத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications