சாதனைத் தங்கம்... மாரியப்பனுக்கு பத்ம ஸ்ரீ விருது... வழங்கினார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பத்ம ஸ்ரீ விருது இன்று வழங்கினார்.
டெல்லி: கடந்த ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
தமிழ்நாட்டின் சேலத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தற்கு இந்தியா முழுவதும் இருந்து அவருக்கு பாராட்டு மற்றும் பரிசு மழை கொட்டியது. இதனைத் தொடர்ந்து அவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்க மத்திய அரசு அறிவித்து.

பத்ம விருது வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்றது. அதில், மாரியப்பன் தங்கவேலுவிற்கு பத்ம ஸ்ரீ விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். மேலும், ஒலிம்பிக்கில் 4-வது இடத்தை பிடித்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபாகரம்கர், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், பாடகர் கைலாஷ்கேர் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.
இதுதவிர பாடகர் ஜேசுதாஸ், சத்குரு ஜக்கி வாசுதேவ், மறைந்த பத்திரிகையாளர் சோ சார்பில் அவரது மனைவி ஆகியோருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications