ஊரடங்கு காலத்தில் கொரோனாவை பரப்பிய ரகசிய திருமணங்கள்.. எதுவுமே செல்லாது.. மத்திய பிரதேச அரசு அதிரடி
இந்தூர்: கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி ரகசியமாக நடத்தப்படும் திருமணங்கள் செல்லாது என மத்தியப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா பரவலின் 2ஆம் அலை இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. பல மாநிலங்களிலும் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி மத்தியப் பிரதேசத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அதிகளவில் பொதுமக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கும் வகையில் திருமண விழாக்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
இருப்பினும், மாநிலம் முழுவதும் ரகசியமாகத் திருமணங்கள் நடைபெறுவது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இது தொடர்பாக மத்தியப் பிரதேச அதிகாரிகள் 130 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக கடந்த வாரம் குவாலியரில் உள்ள தப்ராவில் நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொண்டதால் ஒரு கிராமத்திலுள்ள 20% மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மத்திய பிரதேச அரசு புதிய உத்தரவு ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதாவது ஊரடங்கு காலத்தில் நடைபெற்ற அனைத்து திருமணங்களையும் செல்லாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் இனி வரும் ஊரடங்கு காலத்தில் திருமணங்கள் நடைபெறுவதைத் தடுக்க முடியும் என அம்மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், ஊரடங்கு காலத்தில் நடைபெற்ற திருமணங்களுக்குச் சான்றிதழ்களை வழங்கக் கூடாது என்றும் மத்தியப் பிரதேச அரசு அம்மாநில அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications