சிறையில் பூத்த காதல்... இப்போது விடுதலை, ஆனால் சந்தோஷம் இல்லை... சினிமாவை மிஞ்சும் ரேவதியின் கதை!
மைசூரு: தனது 16 வயதில் கொலைக் குற்றத்திற்காகச் சிறை சென்ற ரேவதி என்ற பெண், தற்போது 14 ஆண்டுகளுக்குப் பின் ரிலீசாகி உள்ளார். சிறுமியாக சிறைக்குச் சென்ற இப்பெண் தற்போது திருமதியாக, ஒரு குழந்தைக்கு தாயாக விடுதலையாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலத்தில் நன்னடத்தையின் அடிப்படையில் நேற்று மாலை பல்வேறு சிறைகளில் இருந்து 14 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்த 375 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேர் பெண்கள் ஆவர்.

இந்த 13 பேரில் ஒருவர் தான் ரேவதி. இவர் மைசூரு மத்திய சிறையிலிருந்து நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் சோகத்துடன்தான் அவர் விடுதலையாகி வெளியே வந்துள்ளார்.
தனது 16 வயதில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றவர் ரேவதி. தான் வீட்டுவேலை செய்த வீட்டு உரிமையாளரான பெண்ணைக் கொலை செய்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார். ரேவதியை அவர் பாலியல் தொழிலாளியாக்க முற்பட்டபோது, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இந்தக் கொலையை அவர் செய்துள்ளார்.
ஆனால், சிறையில் தனது வயதிற்கான ஆதாரத்தை ரேவதியால் சமர்ப்பிக்க இயலவில்லை. இதனால் ரேவதிக்கு 18 வயதானதாக ஆவணங்களில் பதிவானது. அதனைத் தொடர்ந்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
சிறை சென்ற ரேவதி, அங்கு தன்னை விட 10 வருடம் மூத்தவரான அன்புராஜ் என்பவரோடு அறிமுகம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. சந்தனக்கடத்தல் வீரப்பனுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் வாங்கிக் கொடுத்ததற்காக அன்புராஜுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்தக் காதல் ஜோடி, கடந்த 2011ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு தம்பதியாக மாறியது. தற்போது அவர்களுக்கு 9 மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்தச் சூழ்நிலையில் தான் தற்போது ரேவதிக்கு நன்னடத்தைக் காரணமாக விடுதலை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கணவரைப் பிரிந்து சிறையில் இருந்து வெளியேறியுள்ளார் ரேவதி. ஏற்கனவே 23 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்புராஜ், இனி மீதி காலங்களையும் அங்கேயே கழிக்க வேண்டியது தான்.
விடுதலைக்குப் பின் திருப்பூர் செல்லவுள்ள ரேவதி அங்குள்ள தனது உறவினர்கள் உதவியுடன் வேலை செய்து குழந்தையை வளர்க்க திட்டமிட்டுள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் ரேவதி தையல் கற்றுக் கொண்டார். எனவே, அதனையே தொழிலாகக் கொண்டு வாழ அவர் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications