பூஜை போட்டு பெங்களூரில் இருந்து ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மார்ஸ் விண்கலம்
Subscribe to Oneindia Tamil
மும்பை: செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா அனுப்பும் விண்கலம் பெங்களூரில் உள்ள இஸ்ரோவில் இருந்து ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா வரும் 28ம் தேதி விண்கலத்தை அனுப்பவிருக்கிறது. பெங்களூரில் உள்ள இஸ்ரோவில் தயாரிக்கப்பட்ட இந்த விண்கலத்திற்கு நேற்று பூஜை போட்டனர். மாலை 6 மணி அளவில் விண்கலம் அதன் ஏவுதளமான சென்னை அருகே உள்ள ஸ்ரீஹரிகோட்டாவுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது.

விண்கலம் ஒரு டிரக்கில் அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு பாதுகாப்பாக மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் சென்றனர். இந்த டிரக் சென்ற வழி ரகிசயமாக வைக்கப்பட்டது.
இந்த விண்கலம் பிஎஸ்எல்வி ராக்கெட்டில் வைத்து அனுப்பி வைக்கப்படுகிறது. அதற்கு முன்பு பல்வேறு கட்ட பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications