திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவில் அருகே பற்றி எரிந்த தீ..எங்கும் புகைமூட்டம்..தவித்த பக்தர்கள்
திருப்பதி: கோவிந்தராஜசாமி கோவில் அருகே பற்றி எரிந்த தீயினால் திருப்பதி நகரத்தில் பல பகுதிகளில் புகை மூட்டமாக காணப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தினால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவில் அருகே போட்டோபிரேம் கடை உள்ளது. இங்கு சாமி படங்கள், அரசியல் கட்சி படங்களை பிரேம் செய்து விற்பனை செய்ய கூடிய 3 மாடிகள் கொண்ட புகைப்பட கடையாகவும் உள்ளது. தீடீரென லாவண்யா போட்டோபிரேம் கடையில் பற்றிய தீ மளமளவென வேகமாக பரவியது. உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்த மற்ற வியாபாரிகள், பக்தர்கள், பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.

இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துவந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 3 கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் சில நிமிடங்களில் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தால் போட்டோ கடையில் இருந்த 50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து தேசமடைந்து இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், கோவிலுக்கு அருகில் உள்ள போட்டோ பிரேம் கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக திருப்பதி காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார். திருப்பதியில் மலை மேல் உள்ள ஏழுமலையானை தரிசனம் செய்யும் முன்னர் பக்தர்கள் கோவிந்தராஜசாமியை தரிசனம் செய்வது வழக்கம். இன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்த நிலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதைப் பார்த்து அச்சமடைந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications