For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாபா ராம்தேவ் வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்கமாட்டாரா.. இன்னைக்கு என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

Google Oneindia Tamil News

ஹரித்துவார்: மே 23 ஆம் தேதியை மோடி தினமாக கொண்டாட வேண்டும் என்று யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

யோகா குரு பாபா ராம்தேவ் ஏற்கனவே பல்வேறு பலமுறை சர்ச்சைக்குரிய வகையில் பேசி பல பிரச்சனைகளில் சிக்கியுள்ளார். இந்நிலையில் நேற்று குடும்த்தில் மூன்றாவது மற்றும் அதற்கு மேலாக பிறக்கும் குழந்தைகளுக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது என்றார்.

மேலும் மூன்றாவதாக பிறக்கும் குழந்தைகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் எதுவும் வழங்கக்கூடாது என்றார். இதுதொடர்பாக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்றார். மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதற்காக அவர் பேசிய இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தாந்தோன்றிதனமா எதுவும் செய்யாம ஜனநாயகபூர்வ திட்டங்களை கொண்டு வாங்க.. மோடிக்கு திருமா கோரிக்கை! தாந்தோன்றிதனமா எதுவும் செய்யாம ஜனநாயகபூர்வ திட்டங்களை கொண்டு வாங்க.. மோடிக்கு திருமா கோரிக்கை!

மோடி தினம்

மோடி தினம்

அந்த சர்ச்சையே இன்னும் அடங்கவில்லை. அதற்குள் மேலும் ஒரு கருத்தை கூறியுள்ளார் பாபா ராம்தேவ். அதாவது ஆண்டு தோறும் மே 23ஆம் தேதி மோடி தினமாக கொண்டாடப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

மக்களின் நம்பிக்கை

மக்களின் நம்பிக்கை

ஹரித்துவாரில் பாபாராம் தேவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, மோடியின் வெற்றி கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை. ஒரு பக்கம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, மற்றொரு பக்கம் மோடி மட்டும் தனியாக இருந்தார்.

பாதுகாப்பான கைகள்

பாதுகாப்பான கைகள்

அவர் தேர்தலில் சண்டையிட்டு உத்தரப்பிரதேசத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். இப்போது மக்கள் பாதுகாப்பான கைகளில் இருப்பதைப்போல் உணருகின்றனர்.

மோடி திவாஸ்

மோடி திவாஸ்

மே 23 ஆம் தேதி பாஜக மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நாள் மோடி தினம் அல்லது லோக் கல்யாண் தினமாக கொண்டாடப்பட வேண்டும். இவ்வாறு பேசியுள்ளார் பாபா ராம்தேவ்.

மாட்டிறைச்சிக்கு பதில்

மாட்டிறைச்சிக்கு பதில்

பசு பாதுகாவலர்களுக்கும் பசு கடத்தல்காரர்களுக்கும் இடையிலான சண்டையை நிறுத்த மாட்டிறைச்சியை தடை செய்ய வேண்டும் என்றும் மாட்டிறைச்சிக்கு பதில் வேறு ஏதாவது உண்ணக்கூடிய இறைச்சியை அவர்கள் உண்ணலாம் என்றும் பாபா ராம்தேவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Yoga Guru Baba Ramdev urges to celebrate May 23rd as Modi Diwas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X