பாஜகவினர் உத்தமர்களா… உங்கள் கட்சி எப்படி செயல்படுகிறது தெரியுமா.. வெளுத்து வாங்கும் மாயாவதி
பாஜகவில் உள்ள அனைவரும் உத்தமர்களா என்றும் பிரதமர் மோடி தனது பதவியை தவறாக பயன்படுத்தி வருவதாகவும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
லக்னோ: பாஜக எப்படி செயல்பட்டு வருகிறது என்று தெரியுமா என்றும் பாஜகவினர் உத்தமர்களா என்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதியின் சகோதரர் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கான ரூபாயும், பகுஜன் சமாஜ் கட்சியின் வங்கிக் கணக்கில் 104 கோடி ரூபாயும் முறைகேடான வகையில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக பாஜக புகார் கூறிவருகிறது.

அவர்கள் மீது அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று தகவல் வெளியாகியுள்ளதால் தேசிய அரசியலில் பரபரப்பு உருவாகியுள்ளது. இதுதொடர்பாக பாஜகவிற்கு மாயாவதி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளதோடு, சரமாரியான கேள்விகளையும் கேட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்தே பாஜக இது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறது என்றும் தேவையில்லாமல் வீண் அரசியலில் பாஜக ஈடுபட்டு வருவதாகவும் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக தலைவர்கள், முதலில் தங்களது கட்சி நேர்மையான முறையில் நடைபெறுகிறதா என்பதை விளக்க வேண்டும் என்றும் பாஜகவினர் செய்துவரும் ஊழல் பற்றி விரைவில் நாட்டு மக்கள் தெரிந்து கொள்வார்கள் என்றும் மாயாவதி தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவினர் முதலில் தாங்கள் உத்தமர்களா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் மாயாவதி சவால் விடுத்துள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications