ஹஜ் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 45க உயர்வு
டெல்லி: சவுதி அரேபியாவின் மினா நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவில் புனித ஹஜ் பயணம் மேற்கொண்ட யாத்ரீகர்கள் கடந்த வியாழக்கிழமை மெக்காவில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மினா நகருக்கு சென்றனர். அங்கு அவர்கள் சாத்தான் மீது கல்லெறியும் சடங்கில் கலந்து கொண்டனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் மூச்சு திணறி பலியாகினர்.

கூட்ட நெரிசலில் சிக்கி 769 பேர் பலியானதாக சவுதி அரசு நேற்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1090 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
The death toll of Indians killed in Haj stampede is now 45. We have 50 Indian pilgrims in various hospitals in Saudi Arabia.
— Sushma Swaraj (@SushmaSwaraj) September 28, 2015 ஹஜ் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது. சவுதி அரேபியாவின் பல்வேறு மருத்துவமனைகளில் 50 இந்தியர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications