அப்பா 6.6, அம்மா 7.2, 5 வயது மகன் 5.7 அடி உயரம்: இது உயர்ந்ந்ந்ந்ந்த குடும்பம்!
மீரட்: உத்தர பிரதேசத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் 5 அடி 7 அங்குலம் உயரமாக உள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் ஸ்வெட்லானா சிங்(25). 7 அடி 2 அங்குலம் உயரமான அவர் தான் கடந்த 2012ம் ஆண்டு வரை இந்தியாவின் உயரமான பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்திருந்தார். அதன் பிறகு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 8 அடி 2 அங்குலம் உயரமான சித்தீகா பர்வீன் ஸ்வெட்லானாவின் சாதனையை முறியடித்தார்.
ஸ்வெட்லானாவை பெங்களூரில் உள்ள கல்லூரியில் படிக்கையில் காதலித்து கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டவர் டயடீஷியன் சஞ்சய். அவர் 6 அடி 6 அங்குலம் உயரமானவர். அவர்களின் மகன் கரண் சிங். கரணுக்கு 2 வயதாகும்போது அவர் 4 அடி 5 அங்குலம் உயரத்தை அடைந்தார்.
தற்போது 5 வயதாகும் கரண் 5 அடி 7 அங்குலம் வளர்ந்துள்ளார். சிறுவயதில் இவ்வளவு உயரத்தை அடைந்ததற்காக கின்னஸ் சாதனை புத்தக்கத்தில் ஏற்கனவே இடம்பெற்றுவிட்டார் கரண். அவருக்கு இன்னும் வளர்ச்சி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்வெட்லானா வெகுதூரத்தில் சத்தம் போட்டாலும் அதை கேட்கும் திறன் படைத்தவர். தாயை போன்றே கரணுக்கும் கேட்கும் திறன் அதிகம்.












Click it and Unblock the Notifications