பீஸ் பீஸாக வீசப்பட்ட கணவர், மாமியார் உடல் பாகம்.. மனைவி வெறிச்செயல்! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க
கடந்த 7 மாதங்களுக்கு முன் இவர்கள் இருவரும் மாயமானார்கள்
கவுகாத்தி: கணவன் மற்றும் மாமியாரை பெண் ஒருவர் கொலை செய்து அவர்களின் உடல் பாகங்களை ஒரு மாநிலம் முழுக்க பல்வேறு இடங்களில் துண்டு துண்டாக வீசி இருக்கிறார். மேகாலயாவில் நடந்த இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு டெல்லியில் தனது காதலி சாரதாவை அப்தாப் அமீன் என்ற இளைஞர் கொலை செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அப்தாப் அமீன் - சாரதா இருவரும் டெல்லியில் மெஹ்ரவுளி பகுதியில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் லிவ் இன் உறவில் இருந்துள்ளனர்.இந்த நிலையில்தான் அமீனை திருமணம் செய்ய சாரதா வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதில் வந்த சண்டையில் அமீன் சாரதாவை கொலை செய்துள்ளார். அவரின் உடலை 35 துண்டுகளாக வெட்டி உள்ளார். பின்னர் அதை பிரிட்ஜில் வைத்து 18 நாட்களுக்கு தினமும் 2 பீஸ்களாக ஆட்டில் அப்புறப்படுத்தி உள்ளார்.

கொலை
இதில் கொலையாளி அப்தாப் தனது கொலையை ஒப்புக்கொண்டுள்ளார்.அதன்பின்பே உடல் பாகங்கள் எங்கே இருக்கிறது என்று அவன் காண்பித்து உள்ளான். அதே சமயம் வாக்குமூலம் கொடுக்கும் போது இவன் இடை இடையே சிரித்து, சைக்கோ போல நடந்து கொண்டு இருக்கிறான். படத்தில் காட்டுவது போல சைக்கோத்தனமாக நடந்து கொண்டு இருக்கிறான். இந்த கொலை சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதேபோல் இன்னொரு சம்பவம் தற்போது கவுகாத்தியில் நடந்து உள்ளது.

கவுகாத்தி கொலை
கணவன் மற்றும் மாமியாரை பெண் ஒருவர் கொலை செய்து அவர்களின் உடல் பாகங்களை ஒரு மாநிலம் முழுக்க பல்வேறு இடங்களில் துண்டு துண்டாக வீசி இருக்கிறார். இந்த கொலை கடந்த ஆகஸ்ட் - செப்டம்பர் மாதமே நடந்து உள்ளது. ஆனால் இப்போதுதான் இந்த கொலை வெளியே தெரிந்துள்ளது. கொலை செய்யப்பட்ட மாமியாரின் உடல் பாகங்கள் சில கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. இதையடுத்தே போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட கணவர் பெயர் அமரேந்திரர், மாமியார் பெயர் சங்கரி என்று போலீசார் தெரிவித்துள்ளனர்,

பெண்
கடந்த 7 மாதங்களுக்கு முன் இவர்கள் இருவரும் மாயமானார்கள். அதோடு இவர்களின் மருமகளும் மாயமானார். அவரின் பெயரை போலீசார் வெளியிடவில்லை. இதையடுத்த இவர்களின் உறவினர்கள் போலீசாருக்கு புகார் கொடுத்தனர். அதன்படி மூன்று பேரையும் போலீசார் தேடி வந்தனர். கடந்த வாரம் தேடப்பட்டு வந்த 3 பேரில் அந்த பெண் மட்டும் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் முன்னுக்கு முன் முரணான தகவல்களை தெரிவித்து வந்துள்ளார்.

போன் சோதனை
அதோடு அவரின் போனில் நடத்தப்பட்ட சோதனையில் அந்த பெண் வேறு ஒரு ஆணுடன் குடும்பம் நடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. கணவனும், மாமியாரும் காணாமல் போன நிலையில் இந்த பெண் மட்டும் வேறு ஆணுடன் குடும்பம் நடத்துவது போலீசாருக்கு சந்தேகத்தை கொடுத்தது. இதையடுத்து போலீசார் விசாரணை தீவிரப்படுத்தினர். விசாரணையின் முடிவில் அந்த பெண், தனது கணவர் மற்றும் மாமியாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இரண்டு பேரின் உடலையும் வெட்டி மேகாலயா முழுக்க வீசி இருக்கிறார்.

கவுகாத்தி
கவுகாத்தியில் மட்டும் பல இடங்களில் இவர் உடல் பாகங்களை வீசி இருக்கிறார். கவுகாத்தியில் உடல் பாகங்களை வீசிய பகுதிகளை அந்த பெண் அடையாளம் காட்டி உள்ளார். அங்கிருந்து மாமியாரின் கை பாகங்கள் மட்டும் மீட்கப்பட்டு உள்ளன. அந்த பெண் கள்ளக்காதனுடன் இணைந்து இந்த கொலையை செய்துள்ளார். இவர்களை கொலை செய்துவிட்டு, அவர்களிடம் சொத்துக்களுடன் கள்ளக்காதலுடன் செட்டில் ஆக வேண்டும் என்பதற்காகவே இப்படி செய்ததாக அந்த பெண் வாக்குமூலம் கொடுத்துள்ளார்,












Click it and Unblock the Notifications