விபச்சார விடுதியாக மேகாலயா பாஜக தலைவர் ரிசார்ட்! ஆனால் அவர் கொடுத்த வினோத விளக்கம்! மிரண்ட போலீசார்
கவுஹாத்தி: மேகாலயா பாஜக துணைத் தலைவருக்குச் சொந்தமா ரிசார்ட்டில் நடந்த சோதனை குறித்துப் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேகாலாயா பாஜகவுக்கு இப்போது பெரும் தர்மசங்கடமான ஒரு சூழல் ஏற்பட்டு உள்ளது. அம்மாநில பாஜக துணைத் தலைவர் பெர்னார்ட் மரக் என்பவருக்குச் சொந்தமாக துரா பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் சோதனை நடத்தினர்.
அது விபச்சார விடுதியாகச் செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டி உள்ள போலீசார், அங்கிருந்த 73 பேரைக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக துணைத் தலைவர்
இந்த விவகாரத்தில் மேகாலயா பாஜக துணைத் தலைவரான பெர்னார்ட் என் மரக் என்ற ரிம்புவை போலீசார் தேடி வருகின்றன. அவர் மீது கடத்தல் வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும், தான் எங்கும் தப்பியோடவில்லை என்றும், போலீசார் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பதாகவும் பெர்னார்ட் மரக் தெரிவித்து உள்ளார். மேகாலயாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் நிலையில், அரசியல் பழிவாங்கல் காரணமாகவே தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.

மறுப்பு
அரசியல் ரீதியாக தங்களை எதிர்க்க முடியாததால் இதுபோன்ற நடவடிக்கையில் மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா ஈடுபட்டு வருவதாகவும் அவர் சாடி உள்ளார். தன்னை போக்சோ வழக்கில் கைது செய்து முடக்கிவிட வேண்டும் என்று ஆளும் காங். அரசு துடிப்பதாகவும் இருப்பினும், தனக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக மேகாலயா பாஜகவில் இருந்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

என்ன நடந்தது
வெள்ளி இரவு பெர்னார்ட் மராக்கிற்குச் சொந்தமாக துரா பகுதியில் உள்ள ரிசார்ட்டில் நடத்தப்பட்ட சோதனையில், அங்குச் சுகாதாரமற்ற சூழலில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த ஆறு குழந்தைகள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், அந்த ரிசார்ட்டில் 'விபச்சார விடுதி' இயங்கி வந்ததாகவும் பெர்னார்ட் மராக் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் இதுவரை 73 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

போலீசார்
இது தொடர்பாக போலீசார் மேலும் கூறுகையில், "அனைத்து குழந்தைகளும் அதிர்ச்சியில் உள்ளனர். அவர்களால் சரியாகப் பேசக் கூட முடியவில்லை. பெர்னார்ட் மராக்கும் அவரது நெருங்கிய கூட்டாளிகளும் இந்த ரிசார்ட்டை விபச்சாரத்திற்காகப் பயன்படுத்தி உள்ளனர்" என்று கூறினர். இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை பெர்னார்ட் மராக் முற்றிலுமாக மறுத்துள்ளார். எவ்வித விதிமுறைகளும் விதிகளையும் பின்பற்றாமல் போலீசார் தனது ரிசாட்டில் அத்துமீறி நுழைந்து உள்ளதாகவும் அவர் சாடி உள்ளார்.

வினோத விளக்கம்
அவர் மேலும் கூறுகையில், "கைது செய்யப்பட்டவர்கள் யாரும் அநாகரீகமான செயல்களில் ஈடுபடவில்லை. நான் படிக்க ஸ்பான்சர் செய்த மைனர் மாணவர்களை போலீசார் அத்துமீறி நுழைந்து கைது செய்துள்ளனர். அவர்கள் பாலியல் செயல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர். வயது வந்த நபர் பார்டி செய்வதை விபசாரம் என்று அழைக்க முடியாது. அவர்கள் பார்டி செய்யும் ரிசார்டை விபச்சார விடுதி என்று அழைக்க முடியாது" என்றார்.

மைனர் சிறுமி
இந்த வழக்கு குறித்து போலீசார் தரப்பிலும் விளக்கம் தரப்பட்டு உள்ளது. அதாவது அப்பகுதியைச் சேர்ந்த மைனர் சிறுமி ஒருவரைக் காணவில்லை என்று அவரது தாயார் புகார் அளித்துள்ளனர். அந்த ரிசார்ட்டில் அச்சிறுமியை அவரது உறவினர்கள் கண்டுபிடித்து உள்ளனர். ஒரு வாரத்தில் அச்சிறுமி பல முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக அச்சிறுமி நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் முக்கிய குற்றவாளியும் அவனது நண்பர் ஒருவரும் தன்னையும் தனது தோழியையும் ரிம்பு பாகனுக்கு அழைத்துச் சென்று பல பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிவித்து உள்ளார்.

போலீஸ் அறிக்கை
மேலும், அப்பகுதி மக்களும் அந்த ரிசார்ட் தொடர்பாகப் புகார் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். போலீசார் அங்குச் சோதனைக்கு வந்த போது, அங்குப் பல மைனர் சிறுவர்- சிறுமிகள் மது குடித்து இருந்துள்ளனர். அவர்களில் பலரும் ஆடையில்லாமல் இருந்ததாகவும் அவர்களைப் பிடிக்க முயன்ற போது, அவர்களில் சிலர் தப்பி ஓடிவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். அங்கிருந்து 36 வாகனங்கள், 46 மொபைல், பல லிட்டர் மது பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்!












Click it and Unblock the Notifications