144 அமல், செல்போன் சேவை முடக்கம்.. இதெல்லாம் வாடிக்கை கிடையாது.. ஏதோ நடக்க போகிறது.. மெஹபூபா
Recommended Video
ஸ்ரீநகர்: 144 தடை உத்தரவு அமல்படுத்துவது, செல்போன், இணையதள சேவை முடக்கம்... இவையெல்லாம் வாடிக்கையான ஒன்று கிடையாது. ஏதோ நடக்க போகிறது என மெஹபூபா முஃப்தி தெரிவித்தார்.
காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்த போவதாக வெளியான தகவலை அடுத்து அங்கு ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தீவிரவாதிகளுக்கான தேடுதல் வேட்டையும் தொடங்கியது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, அமர்நாத் யாத்ரீகர்களை சொந்த ஊருக்கு அனுப்புவது, மேலும் மேலும் ராணுவ வீரர்களை வரவழைப்பது ஆகிய சம்பவங்கள் வழக்கத்துக்கு மாறானது என காஷ்மீர் அரசியல் தலைவர்கள் சந்தேகிக்கின்றனர்.

வீட்டுக் காவல்
இந்த நிலையில் நாளுக்கு நாள் காஷ்மீரில் பதற்றம் அதிகரித்து வருகிறது. நேற்று நள்ளிரவு முதல் முன்னாள் முதல்வர்களான மெஹபூபா முஃப்தி, ஒமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 144 தடையுத்தரவும் அமல்படுத்தப்பட்டது.

உற்று நோக்கும் இந்தியா
இதுகுறித்து மெஹபூபா முஃப்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் மக்களால் தேர்வு செய்யப்பட்டு அமைதிக்காக போராடும் என் போன்றோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டது முரணானது. இதையெல்லாம் இந்த உலகமே உற்று நோக்குகிறது.
|
எதிர்கொள்கிறது
ஜம்மு- காஷ்மீரில் உள்ள மக்களின் குரல்கள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும். மதசார்பற்ற ஜனநாயக இந்தியாவில் உள்ள காஷ்மீர் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஒடுக்குமுறையை எதிர்கொள்கிறது. இந்தியாவே விழித்திடு.
|
144 தடை உத்தரவு
வதந்திகளை நாங்கள்தான் பரப்புகிறோம் என குற்றம்சாட்டியவர்கள் எங்களது அச்சம் ஒரு போதும் தவறானது அல்ல என்பதை ஒரு நாள் உண்மையை உணருவார்கள். வீட்டுக் காவலில் தலைவர்கள் அடைப்பு, இணையதள சேவைகள் முடக்கம், 144 தடை உத்தரவு அமல் ஆகியன வழக்கமான ஒன்றல்ல என முஃப்தி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications